விதியை மீறி உணர்ச்சிவசப்பட்ட ஆப்கானிஸ்தான் வீரர்; கண்டித்த ஐசிசி!

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியின்போது ஐசிசி விதிகளை மீறிய ஆப்கானிஸ்தான் வீரர் ரஹ்மனுல்லா குர்பாஸை ஐசிசி கண்டித்துள்ளது.
விதியை மீறி உணர்ச்சிவசப்பட்ட  ஆப்கானிஸ்தான் வீரர்; கண்டித்த ஐசிசி!

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியின்போது ஐசிசி விதிகளை மீறிய ஆப்கானிஸ்தான் வீரர் ரஹ்மனுல்லா குர்பாஸை ஐசிசி கண்டித்துள்ளது.

உலகக் கோப்பையில் நேற்று முன் தினம் (அக்டோபர் 15) நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அபார வெற்றி பெற்றது. உலகக் கோப்பை வரலாற்றில் ஆப்கானிஸ்தானுக்கு கிடைக்கும் இரண்டாவது வெற்றி இதுவாகும். இந்தப் போட்டியில் ஐசிசியின் விதியை மீறியதாக ஆப்கானிஸ்தான் வீரர் குர்பாஸை ஐசிசி கண்டித்துள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 19-வது ஓவரில் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது குர்பாஸ் ரன் அவுட் ஆனார். ஆட்டமிழந்த பிறகு குர்பாஸ் தனது பேட்டினைக் கொண்டு பவுண்டரி கோடுகளின் மீதும், அங்கிருந்த நாற்காலிகளின் மீதும் தாக்கியுள்ளார். ஐசிசி விதிமுறை 2.2-ன் படி சர்வதேச கிரிக்கெட்டில் கிரிக்கெட் சாதனங்களை அல்லது பொருட்களை சேதப்படுத்துவது விதிமுறை மீறலாகும். அதனால், ஐசிசி குர்பாஸைக் கண்டித்துள்ளது. தனது விதிமீறலை ஒப்புக்கொண்டதால் அவர் சட்டரீதியாக பதிலளிக்கத் தேவையில்லை. இருப்பினும், அவரது ஒழுங்கு நடவடிக்கைகளில் ஐசிசி ஒரு புள்ளியைக் குறைத்துள்ளது.

கடந்த 2 ஆண்டுகளில் ஐசிசி விதிமுறைகளை குர்பாஸ் மீறுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com