நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டம்: இந்திய அணியில் 2 மாற்றங்கள்

உலகக் கோப்பை தொடரின் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சைத் தேர்வு செய்துள்ளது. 
நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டம்: இந்திய அணியில் 2 மாற்றங்கள்

உலகக் கோப்பை தொடரின் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சைத் தேர்வு செய்துள்ளது. 

தர்மசாலா மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா - நியூஸிலாந்து அணிகள் பரஸ்பரம் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பந்து வீச்சைத் தேர்வு செய்துள்ளார். இந்திய அணியை பொறுத்தவரை பிளேயிங் 11-ல் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஷர்துல் தாக்கூர், ஹர்திக் பாண்டியா ஆகியோருக்குப் பதில் முகமது ஷிமி, சூர்யகுமார் யாதவ் இடம்பெற்றுள்ளனர். 

புள்ளிகள் பட்டியலில், முதல் முறையாக உலகக் கோப்பையை கைப்பற்றும் முனைப்பிலிருக்கும் நியூஸிலாந்து, ரன் ரேட் அடிப்படையில் முதலிடத்தில் இருக்கிறது. 3-ஆவது முறையாக சாம்பியனாகும் முயற்சியில் இருக்கும் இந்தியா, 2-ஆவது இடத்தில் உள்ளது. இந்த ஆட்டத்தில் வெற்றி காணும் அணி, அரையிறுதி வாய்ப்பை நெருங்கும். இந்திய அணியைப் பொருத்தவரை, மிகப்பெரிய சவாலாக இந்த ஆட்டம் இருக்கும். ஹா்திக் பாண்டியா காயம் கண்டு விலகியது தாக்கத்தை ஏற்படுத்தும்.

தொடா்ந்து 4 வெற்றிகளைப் பதிவு செய்த பொருத்தமான அணியில் தற்போது பாண்டியா விலகல் காரணமாக மாற்றம் ஏற்படுத்துவதென்பது அதன் ஆட்டத்திறனில் தடுமாற்றத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. ஏனெனில், அவரது இடத்தை பூா்த்தி செய்யக் கூடிய ஒரு ஆல்-ரவுண்டா் தற்போது அணியின் வசம் இல்லை. அதேசமயம் தா்மசாலா மைதானம் இன்னிங்ஸ் செல்லச் செல்ல வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com