உலகக் கோப்பையில் அதிகமுறை 5 விக்கெட்டுகள் வீழ்த்தி முகமது ஷமி சாதனை!

உலகக் கோப்பையில் இந்திய அணிக்காக அதிக முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை  இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமி படைத்துள்ளார்.
உலகக் கோப்பையில் அதிகமுறை 5  விக்கெட்டுகள் வீழ்த்தி முகமது ஷமி சாதனை!

உலகக் கோப்பையில் இந்திய அணிக்காக அதிக முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற சாதனையை  இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் முகமது ஷமி படைத்துள்ளார்.

உலகக் கோப்பையின் இன்றையப் போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய நியூசிலாந்து முதலில் பேட் செய்தது. அந்த அணி 273 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்தியா தரப்பில் சிறப்பாக பந்துவீசிய முகமது ஷமி 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். இதன்மூலம், உலகக் கோப்பையில் இந்திய அணிக்காக அதிக முறை 5  விக்கெட்டுகளைக் கைப்பற்றிய வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். அவர் இந்திய அணிக்காக உலகக் கோப்பையில் இதுவரை 2 முறை 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் வீரர்களான கபில் தேவ், வெங்கடேஷ் பிரசாத், ராபின் சிங், ஆஷிஷ் நெஹ்ரா மற்றும் யுவராஜ் சிங் ஆகியோர் உலகக் கோப்பையில் இந்திய அணிக்காக தலா ஒரு முறை 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளனர்.

இன்றையப் போட்டியின் மூலம் முகமது ஷமி படைத்த சாதனைகள் பின்வருமாறு: 

உலகக் கோப்பையில் அதிகமுறை 4 விக்கெட்டுகள்

மிட்செல் ஸ்டார்க் (ஆஸ்திரேலியா) - 6 முறை
இம்ரான் தாஹிர் (தென்னாப்பிரிக்கா) - 5 முறை
முகமது ஷமி (இந்தியா) - 5 முறை

(முகமது ஷமியைத் தவிர மற்ற இந்திய பந்துவீச்சாளர்கள் யாரும் உலகக் கோப்பையில் இரண்டு முறைக்கு மேல் 4 விக்கெட்டுகளை எடுத்தது கிடையாது)

உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்தியர்கள்

ஜாகிர் கான் - 44 விக்கெட்டுகள்
ஜவகல் ஸ்ரீநாத் - 44  விக்கெட்டுகள்
முகமது ஷமி - 36 விக்கெட்டுகள்
அனில் கும்ப்ளே - 31 விக்கெட்டுகள்
ஜஸ்பிரித் பும்ரா - 29 விக்கெட்டுகள்
கபில் தேவ் - 28  விக்கெட்டுகள்

உலகக் கோப்பையில் முகமது ஷமி

போட்டிகள் 12
விக்கெட்டுகள்
 36
சராசரி  
 15.02
ஸ்டிரைக் ரேட் 
 17.6
எகானமி  5.09

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com