பாபர் அசாமை கேப்டன் பதவியிலிருந்து நீக்குங்கள்; கடுமையாக விமர்சிக்கும் முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள்!

பாகிஸ்தான் அணியின் கேப்டன் பதவியிலிருந்து பாபர் அசாமை நீக்க வேண்டும் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர்கள் பலர் தெரிவித்துள்ளனர்.
பாபர் அசாமை கேப்டன் பதவியிலிருந்து நீக்குங்கள்; கடுமையாக விமர்சிக்கும் முன்னாள் பாகிஸ்தான் வீரர்கள்!

பாகிஸ்தான் அணியின் கேப்டன் பதவியிலிருந்து பாபர் அசாமை நீக்க வேண்டும் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர்கள் பலர் தெரிவித்துள்ளனர்.

உலகக் கோப்பையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று (அக்டோபர் 23) நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் பாகிஸ்தானை 8 விக்கெட்டுகள் வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் பாகிஸ்தானுக்கு ஏற்பட்ட தோல்வி நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. நேற்றைய தோல்வி இந்த உலகக் கோப்பைத் தொடரில் பாகிஸ்தானின் ஹாட்ரிக் தோல்வியாகும்.

இந்த தோல்விக்குப் பிறகு பாகிஸ்தான் அணியின் மீதும் அந்த அணியின் கேப்டன் பாபர் அசாமின் மீதும் கடுமையான விமர்சனங்களை பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர்கள் முன்வைத்தனர். மேலும், அவர்கள் பாபர் அசாமை கேப்டன் பதவியிலிருந்து நீக்க வேண்டும் எனவும் தெரிவித்து வருகின்றனர்.

வாசிம் அக்ரம், மிஸ்பா உல் ஹக், ரமீஸ் ராஜா, ரஷீத் லாட்டிஃப், முகமது ஹஃபீஸ், ஆக்யூப் ஜவாத், சோயிப் மாலிக், மொயின் கான் மற்றும் சோயிப் அக்தர் போன்ற பலரும் பாகிஸ்தான் அணி வீரர்களின் மோசமான விளையாட்டையும், அந்த அணியின் கேப்டன் பாபர் அசாமையும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். 

ஆக்யூப் ஜவாத்

பாபர் அசாமுக்குப் பதிலாக ஷகின் அப்ரிடி டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் பாகிஸ்தான் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட வேண்டும். பாகிஸ்தான் அணியின் சிறந்த எதிர்காலத்துக்கு ஷகின் அப்ரிடியை அணியின் கேப்டனாக்க வேண்டும். பாபர் அசாம் தன்னை ஒரு சிறந்த கேப்டனாக நிரூபிக்கத் தவறிவிட்டார்.  

வாசிம் அக்ரம்

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக பாகிஸ்தான் வீரர்கள் ஃபீல்டிங் செய்த விதம் மிகவும் மோசமாக இருந்தது. அவர்கள் உடல் மொழி வெற்றி பெறும் நம்பிக்கை இல்லாதது போலிருந்தது. 283 ரன்கள் என்பது குறைந்த ரன்கள் கிடையாது. பாகிஸ்தானின் பந்துவீச்சு மிகவும் சராசரியானதாக இருந்தது. ஃபீல்டிங் மிகவும் பரிதாபகரமாக இருந்தது. கடந்த ஓராண்டாக பாகிஸ்தான் வீரர்கள் உடல்தகுதித் தேர்வு மேற்கொள்ளவில்லை. நவீன கால கிரிக்கெட்டில் நீங்கள் முழு உடல்தகுதியுடன் இல்லையென்றால், எப்படி கேட்ச் பிடிப்பீர்கள். பவுண்டரிகளைத் தடுப்பீர்கள். 

மிஸ்பா உல் ஹக்

பாபர் அசாம் அணியை வழிநடத்துவது மிகவும் சதாரணமானதாக இருந்தது. அவரின் ஃபீல்டிங் நிறுத்தும் விதம் மற்றும் பந்துவீச்சாளர்களுக்கு ஓவர் கொடுக்கும் விதம் ஏதோ புதிதாக கேப்டன் பதவியில் இருப்பவர் மேற்கொள்வது போலிருந்தது. ஹாரிஸ் ரௌஃப்க்கு பவர் பிளேவில் பந்துவீச கொடுத்ததால் அவரது நம்பிக்கை ஒரு சில பவுண்டரிகள் அடித்ததும் உடைந்துவிட்டது. அது தவறான முடிவு. 

உலகக் கோப்பை அரையிறுதிக்கு முன்னேற வேண்டுமென்றால் இனிவரும் 4 போட்டிகளிலும் ( இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, வங்கதேசம்) பாகிஸ்தான் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com