
வங்கதேசத்துக்கு எதிராக முதலில் பேட் செய்த நெதர்லாந்து 229 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
உலகக் கோப்பையில் கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் போட்டியில் வங்கதேசம் மற்றும் நெதர்லாந்து அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்று நெதர்லாந்து முதலில் பேட் செய்தது.
அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் விக்ரமஜித் சிங் 3 ரன்களிலும் , மாக்ஸ் ஓடௌத் 0 ரன்னிலும் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர். அதன்பின் களமிறங்கிய வீரர்களில் வெஸ்லே பரேசி 41 ரன்களும், சைபிராண்ட் 35 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் யாரும் பெரிதாக ரன்கள் குவிக்கவில்லை. நிதானமாக விளையாடிய நெதர்லாந்து கேப்டன் 89 பந்துகளில் 68 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் நெதர்லாந்து 229 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
வங்கதேசம் தரப்பில் ஷோரிஃபுல் இஸ்லாம், டஸ்கின் அகமது, முஸ்தபிசூர் மற்றும் மஹேதி ஹாசன் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
230 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி வங்கதேசம் விளையாடி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.