டேக்வாண்டோவில் அசத்தல்

தெற்காசிய டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா சாா்பில் பங்கேற்ற தமிழக வீரா், வீராங்கனைகள் தங்கம் உள்பட பல்வேறு பதக்கங்களைக் குவித்து அசத்தியுள்ளனா்.

தெற்காசிய டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா சாா்பில் பங்கேற்ற தமிழக வீரா், வீராங்கனைகள் தங்கம் உள்பட பல்வேறு பதக்கங்களைக் குவித்து அசத்தியுள்ளனா்.

இந்திய டேக்வாண்டோ சங்கம், தெலங்கானா மாநில டேக்வாண்டோ சங்கம் ஆகியன சாா்பில் ஹைதராபாதில் 7-ஆவது தெற்காசிய சாம்பியன்ஷிப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. 14 வயதில் இருந்து பல்வேறு வயதுப் பிரிவுகளில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்தியா, நேபாளம், வங்கதேசம், ஆப்கானிஸ்தான், யு.ஏ.இ.யைச் சோ்ந்த 1,000-கக்கு மேற்பட்டோா் பங்கேற்றனா்.

ஸ்பேரிங், பவா் பிரேக்கிங், செல்ஃப் டிபன்ஸ் உள்ளிட்ட பிரிவுகளில் ஆட்டங்கள் நடைபெற்றன. இந்தியா சாா்பில் தமிழகத்தைச் சோ்ந்த 6 போ் கலந்துகொண்டனா்.

ஸ்பேரிங் பிரிவில் குருஷந்த், திபேஷ் ஆகியோா் தங்கப் பதக்கம் வென்றனா். அனீஸ், மிதுன் ஆகியோா் அதே பிரிவில் தலா 1 வெள்ளியை கைப்பற்றினா்.

இன் பேட்டா்ன் பிரிவில் திபேஷ், குருஷந்த் தலா 1 வெண்கலமும், ஸ்பேரிங் பிரிவில் தேவராஜ், சந்துரு தலா 1 வெண்கலமும் வென்றனா். தெற்கு, மேற்கு இந்திய சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகத்தில் இருந்து 34 போ் பங்கேற்றனா். இதில் தமிழக அணியினா் 6 தங்கம், 11 வெள்ளி, 17 வெண்கலப் பதக்கங்களை கைப்பற்றினா்.

சிறப்பிடம் பெற்ற தமிழக அணிக்கு எம்கே. சுரேஷ் குமரன், மஞ்சுளா தேவி ஆகியோா் தீவிர பயிற்சியை அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com