இந்திய பந்துவீச்சாளர்கள் தேவை; விளம்பரம் வெளியிட்ட நெதர்லாந்து கிரிக்கெட் வாரியம்!

வலைப்பயிற்சியில் பந்துவீச இந்திய பந்துவீச்சாளர்கள் தேவை என சமூக ஊடகத்தில் நெதர்லாந்து கிரிக்கெட் வாரியம் விளம்பரம் செய்துள்ளது.
படம் | எக்ஸ் (ட்விட்டர்)
படம் | எக்ஸ் (ட்விட்டர்)

வலைப்பயிற்சியில் பந்துவீச இந்திய பந்துவீச்சாளர்கள் தேவை என சமூக ஊடகத்தில் நெதர்லாந்து கிரிக்கெட் வாரியம் விளம்பரம் செய்துள்ளது.

உலகக் கோப்பை தொடர் வருகிற அக்டோபர் 5 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. உலகக் கோப்பை தொடரில் கலந்துகொள்ளும் நெதர்லாந்து அணி ஆகஸ்ட் இறுதியில் இந்தியாவுக்கு வந்தடைந்தது. உலகக் கோப்பை  தொடருக்காக நெதர்லாந்து அணி வீரர்கள் முன்னதாகவே இந்தியாவுக்கு வந்து பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், வலைப்பயிற்சியில் பந்துவீச இந்திய பந்துவீச்சாளர்கள் தேவை என சமூக ஊடகத்தில் நெதர்லாந்து கிரிக்கெட் வாரியம் சார்பில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. 

இது தொடர்பாக நெதர்லாந்து கிரிக்கெட் வாரியம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள எக்ஸ் வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது: உலகக் கோப்பை தொடருக்கு தயாராவதில் நெதர்லாந்து அணியின் வலைப்பயிற்சியில்  பந்துவீசும் பந்துவீச்சாளராக இணைய நினைப்பவர்கள் கீழே உள்ள இணைப்பை அழுத்தி தங்களது பந்துவீச்சு விடியோவை பதிவு செய்யலாம். பதிவு செய்யும் வீரர்கள் 18 வயதுக்கு மேற்பட்டவராக இருக்க வேண்டும். இந்தியாவில் வசிப்பவராக இருக்க வேண்டும். ஒருவர் ஒரு விடியோவினை மட்டுமே அனுப்ப வேண்டும். அந்த விடியோவில் ஆறு பந்துகள் வீசுவதை எடுத்து அனுப்ப வேண்டும். விடியோவை குறிப்பிட்டுள்ள கேமராவில் மட்டுமே எடுக்க வேண்டும். எடிட் செய்த விடியோக்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. செப்டம்பர் 17  ஆம் தேதிக்குள் விடியோ சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

பந்துவீசும்போது  பந்தின் பாதை தெளிவாக தெரியுமாறு விடியோ எடுத்து அனுப்பப்பட வேண்டும். வேகப் பந்துவீச்சாளர்களை பொருத்தவரை மணிக்கு மணிக்கு 120 கி.மீ வேகத்துக்கு அதிகமாக வீசபவர்களாக இருக்க வேண்டும். சுழற்பந்துவீச்சை பொருத்தவரை மணிக்கு 80 கி.மீ வேகத்துக்கு அதிகமாக வீசுபவர்களாக இருக்க வேண்டும். தேர்வாகும் வீரர்களுக்கு தேவையான தங்குமிடம், உணவு, போன்ற செலவுகளை நெதர்லாந்து கிரிக்கெட் வாரியம் ஏற்றுக் கொள்ளும் எனப் பதிவிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com