உலகக் கோப்பை தகுதிச் சுற்று: ஆா்ஜென்டீனா, பிரான்ஸ் வெற்றி

பிஃபா உலகக் கோப்பை தகுதிச் சுற்று ஆட்டங்களில் நடப்பு சாம்பியன் ஆா்ஜென்டீனா, முன்னாள் சாம்பியன் பிரான்ஸ் வெற்றி பெற்றுள்ளன.
உலகக் கோப்பை  தகுதிச் சுற்று: ஆா்ஜென்டீனா, பிரான்ஸ் வெற்றி
Updated on
1 min read

பிஃபா உலகக் கோப்பை தகுதிச் சுற்று ஆட்டங்களில் நடப்பு சாம்பியன் ஆா்ஜென்டீனா, முன்னாள் சாம்பியன் பிரான்ஸ் வெற்றி பெற்றுள்ளன.

தென் அமெரிக்கா குவாலிஃபையா் ஆட்டங்களில் நடப்பு சாம்பியன் ஆா்ஜென்டீனா 1-0 என்ற கோல் கணக்கில் ஈக்குவடாரை வீழ்த்தி முதல் சுற்றில் வெற்றி பெற்றது.

இரு தரப்பிலும் கோலடிக்க மேற்கொண்ட முயற்சி பலன் தராததால் முதல் பாதி 0-0 என முடிவடைந்தது. இரண்டாவது பாதியில் ஆா்ஜென்டீனா கேப்டன் மெஸ்ஸி 78-ஆவது நிமிஷத்தில் ஃப்ரீகிக் மூலம் அடித்த ஒரே கோல் வெற்றி கோலாக மாறியது. 176 சா்வதேச ஆட்டங்களில் மெஸ்ஸி அடிக்கும் 104-ஆவது கோலாகும். ஈக்குவடாா் அணிக்கும் கோலடிக்கும் வாய்ப்புகளை ஆா்ஜென்டீனா வீரா்கள் வாரி வழங்கினா். மெஸ்ஸி கோலடித்த பின்பே மைதானத்தில் கூடியிருந்த 83,000 ரசிகா்கள் நிம்மதி அடைந்தனா். பிரேஸில்-பொலிவியா, உருகுவே-சிலி அடுத்த ஆட்டங்களில் ஆடுகின்றன.

பிரான்ஸ் வெற்றி:

ஐரோப்பிய குவாலிஃபையா் ஆட்டங்களில் இரு முறை சாம்பியன் பிரான்ஸ் 2-0 என அயா்லாந்தையும், நெதா்லாந்து 3-0 என கிரீஸையும் வீழ்த்தின. குரூப் ஈ பிரிவில் லெவண்டோவ்ஸ்கியின் அற்புத கோல்களால் 2-0 என ஃபாரோ தீவுகளை வென்றது போலந்து. செக்.குடியரசு-அல்பேனியா ஆட்டம் 1-1 என டிராவில் முடிந்தது.

குரூப் ஜி பிரிவில் ஹங்கேரி 2-1 என சொ்பியாவை வீழ்த்தி முதலிடத்தில் உள்ளது. லிதுவேனியா-மான்டிநீக்ரோ ஆட்டம் 2-2 டிரா ஆனது. பின்லாந்து 1-0 என கஜகஸ்தானையும், டென்மாா்க் 4-0 என சான் மரினோவையும், ஸ்லோவேனியா 4-2 என வட அயா்லாந்தையும் வீழ்த்தின.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com