ஆல்ரவுண்டராக இருப்பதால் எனக்கு வேலைப்பளு அதிகம்: ஹார்திக் பாண்டியா

ஆல்ரவுண்டராக இருப்பதால் ஒரு பேட்ஸ்மேன் அல்லது பந்துவீச்சாளரைக் காட்டிலும் தனது வேலைப்பளு இரு மடங்கு அதிகம் என  இந்திய அணியின் துணைக் கேப்டன் ஹார்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.
ஆல்ரவுண்டராக இருப்பதால் எனக்கு வேலைப்பளு அதிகம்: ஹார்திக் பாண்டியா

ஆல்ரவுண்டராக இருப்பதால் ஒரு பேட்ஸ்மேன் அல்லது பந்துவீச்சாளரைக் காட்டிலும் தனது வேலைப்பளு இரு மடங்கு அதிகம் என  இந்திய அணியின் துணைக் கேப்டன் ஹார்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.

ஸ்டார் ஸ்போர்ட்ஸுக்கு அளித்த பேட்டியில் அவர் இதனை தெரிவித்தார். 

அப்போது அவர் பேசியதாவது: ஆல்ரவுண்டராக இருப்பதால் மற்ற வீரர்களைக் காட்டிலும் எனது வேலைப்பளு இருமடங்கு அதிகம். சில சமயங்களில் வேலைப்பளு மூன்று மடங்கு அதிகமாக இருக்கும். பேட்ஸ்மேன் அணிக்காக பேட்டிங் செய்த பிறகு சிறிது ஓய்வு இருக்கும். ஆனால், நான் பேட்டிங் செய்த பிறகு பந்துவீச வேண்டியிருக்கும். நான் அவை அனைத்தையும் சமாளித்து சிறப்பாக செயல்பட வேண்டும். அணியின் தேவைக்கேற்ப 10 ஓவரையும் வீசுவேனா, இல்லையா என்பது தெரியும்.

எத்தனை ஓவர்கள் வீச வேண்டும் என்பதெல்லாம் அணியின் தேவையை பொறுத்தே அமையும். நான் 10  ஓவர்கள் வீசுவதற்கான அவசியமில்லையெனில், அப்போது 10 ஓவர் முழுவதையும் நான் வீசுவதில் பயனில்லை. 10 ஓவர்கள் வீச வேண்டும் என்ற சூழல் இருக்கும்போது நான் முழுவதுமாக 10 ஓவர்களையும் வீசுவேன். நான் எப்போதும் என் மீது நம்பிக்கை வைத்துள்ளேன். என்னுடைய தன்னம்பிக்கை என்னை சிறப்பாக செயல்பட வைக்கிறது. எந்த சூழலிலும் நீங்கள் உங்களை நம்ப வேண்டும். இந்த உலகிலேயே நீங்கள்தான் சிறந்தவர் என நம்ப வேண்டும் என்றார்.

ஆசியக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு  எதிரான முதல் போட்டியில் ஹார்திக் பாண்டியா 87 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோர் 266 ஆக உயர காரணமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com