ஒருநாள் போட்டிகளில் விராட் கோலி, கே.எல்.ராகுலின் புதிய சாதனைகள்!

ஆசியக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான சூப்பர் 4 போட்டிக்குப் பிறகு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல் ஒருநாள் போட்டிகளில் பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளனர்.
ஒருநாள் போட்டிகளில் விராட் கோலி, கே.எல்.ராகுலின் புதிய சாதனைகள்!

ஆசியக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான சூப்பர் 4 போட்டிக்குப் பிறகு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல் ஒருநாள் போட்டிகளில் பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளனர்.

ஆசியக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான சூப்பர் 4 ஆட்டத்தில் இந்திய அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 356 ரன்கள் குவித்துள்ளது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல் சதம் விளாசி அசத்தினர். விராட் கோலி 122 ரன்களுடனும், கே.எல்.ராகுல் 111 ரன்களுடனும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

இன்றையப் போட்டிக்குப் பிறகு ஒருநாள் போட்டிகளில் இந்திய வீரர் விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுலினால் நிகழ்த்தப்பட்டுள்ள சாதனைகளை பின்வருமாறு காணலாம்.

ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் 

சச்சின் டெண்டுல்கர் - 18,426
குமார் சங்ககாரா - 14,234
ரிக்கி பாண்டிங் - 13,704
சனத் ஜெயசூர்யா - 13,430
விராட் கோலி - 13,024

பாகிஸ்தானுக்கு எதிரான அதிக ரன்கள் பார்ட்னர்ஷிப்

விராட் கோலி & கே.எல்.ராகுல் - 233 ரன்கள் (3-வது விக்கெட்டுக்கு) (2023)
என்.எஸ்.சித்து & சச்சின் டெண்டுல்கர்- 231 ரன்கள் (2-வது விக்கெட்டுக்கு) (1996)
ஷிகர்  தவான் & ரோஹித் சர்மா - 210 ரன்கள் (முதல் விக்கெட்டுக்கு) (2018)
ராகுல் டிராவிட் & வீரேந்திர சேவக் - 201 (3-வது விக்கெட்டுக்கு) (2005)

குறைந்த இன்னிங்ஸ்களில் ஒருநாள் போட்டிகளில் 13  ஆயிரம் ரன்களைக் கடந்தவர்கள்

விராட் கோலி - 267 இன்னிங்ஸ் 
சச்சின் டெண்டுல்கர் - 321  இன்னிங்ஸ்
ரிக்கி பாண்டிங் - 341 இன்னிங்ஸ் 
குமார் சங்ககாரா - 363 இன்னிங்ஸ்
சனத் ஜெயசூர்யா - 416  இன்னிங்ஸ்

கொழும்புவில் நடைபெற்ற கடைசி 4 போட்டிகளில் விராட் கோலியின் ஸ்கோர்

128* (119 பந்துகள்)
131 (96 பந்துகள்)
110* (116 பந்துகள்) 
122* (94 பந்துகள்)

ஆசியக் கோப்பையில் (ஒருநாள் போட்டி) அதிக ரன்கள் பார்ட்னர்ஷிப்

விராட் கோலி & கே.எல்.ராகுல் - 233 ரன்கள் (பாகிஸ்தானுக்கு எதிராக) (2023)
முகமது ஹஃபீஸ் & என். ஜம்ஷெத் - 224 ரன்கள் (இந்தியாவுக்கு எதிராக) (2012)
சோயிப் மாலிக் & யூனிஸ் கானஸ் - 223 ரன்கள் (ஹாங்  காங்குக்கு எதிராக) (2004)
பாபர் அசாம் & இஃப்டிகார் அகமது - 214 ரன்கள் (நேபாளத்துக்கு எதிராக) (2003)

ஆசியக் கோப்பையில் (ஒருநாள் போட்டி) அதிக சதங்கள்

சனத் ஜெயசூர்யா - 6 சதங்கள்
விராட் கோலி - 4 சதங்கள் 
குமார் சங்ககாரா - 4 சதங்கள்
சோயிப் மாலிக் - 3 சதங்கள்

3-வது & 4-வது இடத்தில் களமிறங்கிய இந்திய வீரர்கள் சதம் (ஒருநாள் போட்டி)

ராகுல் டிராவிட் & சச்சின் டெண்டுல்கர் (கென்யாவுக்கு எதிராக) (1999)
கௌதம் கம்பீர் & விராட் கோலி (இலங்கைக்கு எதிராக) (2009)
விராட் கோலி & கே.எல்.ராகுல் (பாகிஸ்தானுக்கு எதிராக) (2023)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com