ஆரம்பத்தில் பதற்றமடைந்தேன், ஆனால்....சதம் குறித்து மனம் திறந்த கே.எல்.ராகுல்!

ஆரம்பத்தில் பதற்றமடைந்தேன், ஆனால்....சதம் குறித்து மனம் திறந்த கே.எல்.ராகுல்!

பாகிஸ்தானுக்கு எதிராக சதம் விளாசிய கே.எல்.ராகுல் தொடக்கத்தில் பதற்றமாக உணர்ந்ததாக மனம் திறந்துள்ளார்.
Published on

பாகிஸ்தானுக்கு எதிராக சதம் விளாசிய கே.எல்.ராகுல் தொடக்கத்தில் பதற்றமாக உணர்ந்ததாக மனம் திறந்துள்ளார்.

இந்திய அணியின் கே.எல்.ராகுல் காயம் காரணமாக நீண்ட நாள்கள் இந்திய அணியில் இடம் பெறாமலிருந்தார். காயத்திலிருந்து குணமடைந்து அண்மையில் அணிக்குத் திரும்பிய அவர் பாகிஸ்தானுக்கு எதிரான சூப்பர் 4 போட்டியில் சதம் விளாசி அசத்தினார். அவர் 106 பந்துகளில் 111  ரன்கள் எடுத்து அசத்தினார். இந்தப் போட்டியில் இந்திய அணி 228 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில், பாகிஸ்தானுக்கு எதிராக சதம் விளாசிய கே.எல்.ராகுல் தொடக்கத்தில் பதற்றமாக உணர்ந்ததாக மனம் திறந்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: நீண்ட நாள்கள் கழித்து எனது முதல் சர்வதேசப் போட்டியில் விளையாடினேன். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிக்கு முன்னதாக இரண்டு பயிற்சி ஆட்டங்களில் விளையாடினேன். ஆனால், அந்த ஆட்டங்கள் இந்த அளவுக்கு சவால் நிறைந்தது கிடையாது. பாகிஸ்தானுக்கு எதிராக களமிறங்கியபோது எனக்கு சிறிது பதற்றம் இருந்தது. முதல் 10-15 பந்துகள் பதற்றமாகவே உணர்ந்தேன். அதன்பின் நம்பிக்கையுடன் விளையாடினேன். அதன்பின் ஓரிரு பவுண்டரிகள் அடித்தேன். ஆட்டம் மழையால் நிறுத்தப்பட்டது. அடுத்த நாள் ஆட்டம் தொடங்கியபோதும் முதல் 10-15 பந்துகள் பதற்றமாக இருந்தது. பின்னர், பவுண்டரிகள் அடித்தேன். அதன்பின் ரன் குவிப்பதில் கவனம் செலுத்தி விளையாடினேன்.  விராட் கோலி சிறப்பாக விளையாடினார். அவர் 13 ஆயிரம் ரன்கள் குவித்துள்ளார். அவர் சிறந்த ஆட்டக்காரர் என்றார்.

பாகிஸ்தானுக்கு எதிரான கே.எல்.ராகுலின் நேற்றைய சதம் ஒருநாள் போட்டிகளில் அவரது 6-வது சதம் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com