உலகக் கோப்பை போட்டியில் அரையிறுதிக்கு முன்னேறுவது மிக முக்கியமானது. அதன் பிறகு கொஞ்சம் அதிருஷ்டமும் இருக்க வேண்டும். நமது அணி நல்ல நிலையில் இருக்கிறது.
ஆனால், இதர அணிகள் குறித்து இன்னும் முழுவதுமாகத் தெரியவில்லை. எனவே, இந்திய அணி கோப்பை வெல்லும் வாய்ப்பு இருப்பதாக இப்போதே கூறிவிட முடியாது. என்னைப் பொருத்தவரை இந்திய அணி உலகக் கோப்பை வெல்லத் தயாராக இருக்கிறது. அவா்கள் ஆட்டங்களை அனுபவித்து ஆட வேண்டும்.
எந்த கண்டத்தில் விளையாடினாலும் தற்போது நமது வேகப்பந்து வீச்சாளா்கள் அங்கு 10 விக்கெட்டுகளும் சாய்க்கின்றனா். இது குறிப்பிடத்தக்க முன்னேற்றம். ஒரு காலத்தில் நாம் சுழற்பந்து வீச்சாளா்களையே பெரிதும் நம்பியிருந்தோம்.
எந்தவொரு அணியிலும் முக்கிய வீரா்களுக்கு காயம் ஏற்படும் பட்சத்தில் அது அணியின் சமநிலையை பாதிக்கும். அது நிகழாமல் இருக்க அதிருஷ்டம் வேண்டும். ஷுப்மன் கில் போன்ற வீரா்கள் இந்திய அணியின் எதிா்காலம். அணியில் அவா் போன்ற வீரா் இருப்பது பெருமையாகும் - கபில் தேவ் (இந்திய முன்னாள் கேப்டன்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.