ஆசிய விளையாட்டில் தடகள போட்டியில் முதல் பதக்கத்தை இந்தியா வென்றுள்ளது.
குண்டு எறிதல் மகளிர் பிரிவில் இந்தியாவின் கிரண் பலியான் 17.36 மீட்டர் தூரம் வீசி வெண்கலப் பதக்கம் வென்றார். இதில் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கத்தை சீனா வென்றது.
இத்துடன், இந்தியாவுக்கு 8 தங்கம், 12 வெள்ளி, 13 வெண்கலம் என 33 பதக்கங்கள் கிடைத்துள்ளன.