

பஞ்சாப் மற்றும் லக்னௌ அணிகளுக்கு இடையிலான போட்டி லக்னௌவில் உள்ள அடல் பிகாரி வாஜ்பாய் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் பந்து வீச்சைத் தேர்வு செய்தது.
லக்னௌ அணி 20 ஓவர் முடிவில் 159 ரன்களை எடுத்தது. பின்னர் ஆடிய பஞ்சாப் 19.3 ஓவரில் 161 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.
எல்.எஸ்.ஜி அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் 74 ரன்களை எடுத்தார். இந்த ரன்களுடன் ஐபிஎல் போட்டிகளில் அவர் அதிவேகமாக 4000 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற பெருமைய பெற்றார். 105 இன்னிங்ஸில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். இதுவரை மொத்தமாக 4044 ரன்களை எடுத்துள்ளார். 47.02 சராசரி. 135.16 ஸ்டிரைக் ரேட்டுடன் விளையாடியுள்ளார். இதில் 4 சதங்கள் 32 அரை சதங்களும் அடங்கும். ஐபிஎல்லில் அதிகபட்சமாக 132 ரன்களை எடுத்துள்ளார்.
இதற்கு முன்பாக கிறிஸ் கெயில் 112 இன்னிங்ஸிலும், டேவிட் வார்னர் 114 இன்னிங்ஸிலும், விராட் கோலி 128 இன்னிங்ஸிலும், ஏபிடி வில்லியர்ஸ் 131 இன்னிங்ஸிலும் 4000 ஐபிஎல் ரன்களை கடந்து இந்த சாதனையை படைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.