சிஎஸ்கே பந்து வீச்சாளரை பாராட்டிய மலிங்கா!
By DIN | Published On : 18th April 2023 04:09 PM | Last Updated : 18th April 2023 04:09 PM | அ+அ அ- |

ஐபிஎல் போட்டியின் 24-ஆவது ஆட்டத்தில் சென்னை சூப்பா் கிங்ஸ் 8 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரை அதன் சொந்த மண்ணில் திங்கள்கிழமை சாய்த்தது. முதலில் சென்னை 20 ஓவா்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 226 ரன்கள் சோ்க்க, பெங்களூா் 20 ஓவா்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 218 ரன்களே எடுத்தது.
சிஎஸ்கே அணியின் 20 வயதான இளம் பந்து வீச்சாளர் மதிஷா பதிரனா இலங்கையை சேர்ந்தவர். இவர் நேற்றைய போட்டியில் இந்தாண்டு முதன்முறையாக களமிறங்கினார். கடந்தாண்டு ஒரு சில போட்டிகள் மட்டுமே விளையாடினார். நேற்றைய போட்டியில் 2 விக்கெட்டுகள் எடுத்தார். முதல் 2 ஓவர்கள் சரியாக அமையாவிட்டாலும் கடைசி 2 ஓவர்கள் அற்புதமாக பந்து வீசினார். 18வது ஓவரில் 1 விக்கெட் மற்றும் 4 ரன்களை மட்டுமே கொடுத்தார். இது போட்டிக்கு முக்கியமான திருப்புமுனையை ஏற்படுத்தியது. இந்த ஓவருக்குப் பிறகு தோனியே அவரைப் தோளில் தட்டிக்கொடுத்தார்.
போட்டி முடிந்தப் பிறகு முன்னாள் மும்பை இந்தியன்ஸ் வீரர், பயிற்சியாளரும் தற்போதைய ஆர்ஆர் பவுலிங் பயிற்சியாளருமான மலிங்கா பாராட்டி ட்வீட் செய்துள்ளார். பதிரானாவின் பந்து வீசும் ஸ்டைல் மலிங்காவை போலவே இருக்கும். அதனால் அவரை குட்டி மலிங்கா என ரசிகர்கள் அன்போடு அழைக்கின்றனர்.
Thank you Legend . Keep supporting like you always do. pic.twitter.com/EVHXoXO3Oy
— Matheesha Pathirana (@matheesha_9) April 18, 2023
மலிங்கா தனது ட்விட்டர் பக்கத்தில், “ஈர்க்கும் படியாக பந்து வீசினாய் மதிஷனா. ஆட்டத்தின் இறுதியில் நீ அழுத்ததை எதிர்கொண்ட விதம் பிடித்திருந்தது. அருமையான பந்துவீச்சு” என பதிவிட்டிருந்தார். இதற்கு மதிஷனா, “நன்றி லெஜெண்ட். எப்போதும் போல உறுதுணையாக இருங்கள்” என தனக்கு மலிங்கா பந்து வீச கற்றுத்தரும் புகைப்படத்தினை கமெண்ட் செய்திருந்தார்.
ரசிகர்கள் இதை 'குட்டி மலிங்காவை பாராட்டும் மலிங்கா' டிரெண்ட் செய்து வருகின்றனர்.