ஐபிஎல்: மார்க் வுட் விளையாடுவதில் சந்தேகம்
By DIN | Published On : 25th April 2023 07:02 PM | Last Updated : 25th April 2023 07:02 PM | அ+அ அ- |

இங்கிலாந்தை சேர்ந்த வேகப் பந்து வீச்சாளர் மார்க் வுட் ஐபிஎல்-இல் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் விளையாடி வருகிறார். கடந்த 2 போட்டிகளில் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் விளையாடவில்லை. ஆனால் விளையாடிய 4 போட்டிகளில் 11 விக்கெட்டுகளை எடுத்து அசத்தியுள்ளார். முதல் போட்டியில் தில்லிக்கு எதிராக 5/14 எடுத்தது குறிப்பிட்டத்தக்கது.
இந்நிலையில் ஐபிஎல்லின் கடைசி கட்டத்தில் விளையாடமாட்டர் என தகவல் வெளியாகியுள்ளது. ஏனெனில் அவரது மனைவிக்கு குழந்தை பிறக்க உள்ளதால் அந்த நேரத்தில் இங்கிலாந்து செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மரக் வுட் பதிலாக ஆப்கன் வீரர் நவீன் உல்-ஹக் சிறப்பாக பந்து வீசி வருவதும் குறிப்பிடத்தக்கது.