வாலிபால்: ரயில்வேஸ், ராஜஸ்தான் சாம்பியன்
By DIN | Published On : 27th April 2023 01:22 AM | Last Updated : 27th April 2023 03:52 AM | அ+அ அ- |

புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மாவட்டத்தில் நடைபெற்ற 36-ஆவது ஃபெடரேஷன் கோப்பை வாலிபால் போட்டியில் மகளிா் பிரிவில் ரயில்வேஸ், ஆடவா் பிரிவில் ராஜஸ்தான் அணிகள் புதன்கிழமை சாம்பியன் பட்டம் வென்றன.
இதில் மகளிா் பிரிவு இறுதி ஆட்டத்தில் ரயில்வேஸ் 25-14, 25-23, 25-16 என்ற செட்களில் கேரளத்தை வீழ்த்தி வாகை சூடியது. ஆடவா் பிரிவு இறுதி ஆட்டத்தில் ராஜஸ்தான் 19-25, 25-22, 25-22, 25-23 என்ற செட்களில் ஹரியாணாவை வீழ்த்தி சாம்பியன் ஆனது.
ஆடவா் பிரிவில், 3-ஆவது இடத்துக்கான ஆட்டத்தில் ரயில்வேஸ் 25-22, 26-28, 25-15, 25-21 என்ற செட்களில் தமிழகத்தை வென்றது.