வெற்றிகரமான கேப்டனாக 10-வது ஆண்டில் ரோஹித் சர்மா

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக 10-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ரோஹித் சர்மாவை பெருமைப்படுத்தும் விதமாக அந்த அணி நிர்வாகம் ட்விட்டரில் விடியோ ஒன்றினைப் பகிர்ந்துள்ளது.
வெற்றிகரமான கேப்டனாக 10-வது ஆண்டில் ரோஹித் சர்மா

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக 10-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ரோஹித் சர்மாவை பெருமைப்படுத்தும் விதமாக அந்த அணி நிர்வாகம் ட்விட்டரில் விடியோ ஒன்றினைப் பகிர்ந்துள்ளது.

42 விநாடிகள் அளவுக்கு உள்ள அந்த விடியோவில் இருப்பதாவது: மும்மை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக யாரை நியமிப்பது என ஆலோசித்து ரோஹித் சர்மாவை கேப்டனாக நியமிப்பது போன்று தொடங்குகிறது. அதன் பின், 10 ஆண்டுகளுக்குப் பிறகு என கூறப்பட்டு அவர் அணியினை எந்ததெந்த ஆண்டுகளில் வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்று மும்பை இந்தியன்ஸ் கோப்பையை வென்றது எனக் காட்டப்பட்டுள்ளது.

கடந்த 2013 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் தேதி ரோஹித் சர்மா மும்பை இந்தியன் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அவரது தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணி முதல் முறை 2013 ஆம் ஆண்டு கோப்பையை வென்றது. அதன் பின், 2015,2017,2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் மும்பை இந்தியன்ஸ் கோப்பையைக் கைப்பற்றியது. 

கடந்த 2013 ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா செயல்பட்டு வருகிறது. அவர் மும்பை இந்தியன் அணியின் கேப்டனாக 156 போட்டிகளில் விளையாடியுள்ளார். அதில் அவர் 4,085 ரன்கள் குவித்துள்ளார். இந்த 10 ஆண்டுகளில் 27 முறை அவர் அரைசதங்கள் அடித்துள்ளார். 372 பவுண்டரிகளையும், 168 சிக்ஸர்களையும் அவர் விளாசியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com