பேட்டிங் பயிற்சியில் வில்லியம்சன்: உலகக் கோப்பை கனவு நிறைவேறுமா?

பிரபல நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் கேன் வில்லியம்சன் தான் பேட்டிங் பயிற்சி செய்யும் விடியோவினை பதிவிட்டுள்ளார். 
பேட்டிங் பயிற்சியில் வில்லியம்சன்: உலகக் கோப்பை கனவு நிறைவேறுமா?

குஜராத் அணி பீல்டிங்கின் போது சிஎஸ்கே அணி வீரர் ருதுராஜ் அடித்த பந்தினை பவுண்டரி லைனில் தடுக்க பாய்ந்து குதித்தபோது கால்கள் மடங்கி கீழே விழுந்தார். சிக்ஸரை தடுத்து பவுண்டரியாக மாற்றினார். ஆனால் கீழே விழுந்த வில்லியம்சன் எழ முடியவில்லை. பின்னர் ஆட்டத்தில் இருந்து வெளியேறினார். 

இந்த காயம் காரணத்தினால் ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறினார். இதுமட்டுமில்லாமல் ஒருநாள் உலகக் கோப்பை போட்டியிலும் விளையாட முடியாது என மருத்துவர்கள் முன்பு தெரிவித்திருந்தார்கள்.

தற்போது அறுவை சிகிச்சை முடிந்து உடற்பயிற்சி மேற்கொண்டு வருகிறார். எனது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் உள்ளது. மிகவும் சிறிய சிறிய அடியாக எடுத்து வைக்கிறேன். ஒவ்வொரு வாரம் ஒரு புதிய புதிய முன்னேற்றம் நிகழ்கிறதென முன்பு கூறியிருந்தார். 

இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பகத்தில் பேட்டிங் செய்யும் விடியோவினை பகிர்ந்துள்ளார்.

இதனால் நிச்சயமாக ஒருநாள் உலகக் கோப்பை போடியில் விளையாடுவாரென ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளார்கள். ஒருநாள் உலகக் கோப்பையை வெல்லும் கனவு இந்தமுறையாவது நிறைவேறுமாக என ரசிகர்கள் ஏக்கத்துடன் காத்திருக்கிறார்கள். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com