ஸ்டோக்ஸ் மீண்டும் குறுஞ்செய்தி அனுப்பினால்... : ஓய்வு குறித்து மொயின் அலி!
By DIN | Published On : 01st August 2023 04:06 PM | Last Updated : 01st August 2023 04:06 PM | அ+அ அ- |

ஆஷஸ் தொடரிலிருந்து ஜேக் லீச் காயம் காரணமாக வெளியேறிய நிலையில் இசிபி (இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்) மொயின் அலியை மீண்டும் விளையாட வேண்டுமென கோரிக்கை வைத்தது.
மொயின் அலி கடைசியாக செப்.2022இல் டெஸ்ட் போட்டியுடன் ஓய்வை அறிவித்தார். ஐபிஎல் போட்டிகளிலும் மொயின் அலி சிறப்பாகவே விளையாடினார்.
இதையும் படிக்க: அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடர்: பும்ரா தலைமையிலான இந்திய அணி அறிவிப்பு!
இங்கிலாந்து அணிக்கு மொயின் அலி திரும்பினால் பென் ஸ்டோக்ஸ்- மெக்குல்லம் எதிர்பார்க்கும் பேஸ் பால் கிரிக்கெட்டுக்கும் பொருத்தமாக இருப்பாரென பிரபல வேகப் பந்து வீச்சாளர் ஸ்டுவர்ட் ப்ராட் தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து மொயின் அலி மீண்டும் டெஸ்டில் விளையாடினார்.
இதையும் படிக்க: 55 பந்துகளில் 137 ரன்கள்: நிகோலஸ் பூரணின் 13 சிக்ஸர்கள்! வைரல் விடியோ!
ஆஷஸ் தொடர் இங்கிலாந்திற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் ப்ரத்யேகமாக நடைபெறும் டெஸ்ட் போட்டியாகும். இந்தாண்டு ஜூன் 16ஆம் தேதி முதல் தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது. இதில் 2-2 என சமநிலையில் முடிவடைந்தது. முதலில் 2 போட்டிகளிலும் ஆஸி. வென்றாலும் கடைசி 3 போட்டிகளில் இங்கிலாந்து சிறப்பாக விளையாடியது குறிப்பிடத்தக்கது.
இறுதி டெஸ்டில் மொயின் அலி முக்கியமான விக்கெட்டுகளை எடுத்தார். பிராட் மற்றும் மொயின் அலி இந்த தொடரோடு டெஸ்டில் ஓய்வினை அறிவித்தார்கள். மொயின் அலி 68 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 3094 ரன்களும், 204 விக்கெட்டுகளும் எடுத்து டெஸ்ட் கிரிக்கெட்டினை முடித்துள்ளார்.
“நான் தேவையானதை செய்து விட்டேன். இன்னொரு முறை பென் ஸ்டோக்ஸ் எனக்கு குறுஞ்செய்தி அனுப்பினால் நான் அதை டெலிட் செய்து விடுவேன்” என கலகலப்பாக கூறியுள்ளார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...