

தான் எப்போதும் அணியின் வெற்றிக்காக மட்டுமே விளையாடுவதாக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாக்குர் தெரிவித்துள்ளார்.
இந்தியா அணி மேற்கிந்தியத் தீவுகள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இந்திய அணி டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் இன்று தொடங்குகிறது.
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி 200 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ஷர்துல் தாக்குர் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதையும் படிக்க: உலகக் கோப்பை: இந்தியா - பாக். போட்டிக்கான தேதி மாற்றம்!
இந்த நிலையில், தான் எப்போதும் அணியின் வெற்றிக்காக மட்டுமே விளையாடுவதாக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாக்குர் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: நான் அணியில் இடம் பிடிக்க வேண்டும் என்பதற்காக ஒருபோதும் விளையாடியதில்லை. நான் அந்த மனநிலையில் விளையாட முடியாது. நான் அவ்வாறு நினைத்து விளையாடும் வீரர் கிடையாது. நான் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெறவில்லையெனில் அது அணியைத் தேர்வு செய்பவர்கள் எடுக்கும் முடிவு. அவர்களது முடிவில் என்னால் எதுவும் செய்ய முடியாது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.