பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புஅமெரிக்காவிடம் இந்திய தரவுகள்: ராகுல் காந்தி குற்றச்சாட்டுகமல்ஹாசன், சிரஞ்சீவிக்கு தெலங்கானா அரசு திரைப்பட விருது லெபனானில் மாயமான இஸ்ரேல் வீரரைத் தேடி வான்வழித் தாக்குதல்: 41 போ் உயிரிழப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

குல்தீப் நன்றாக பந்து வீசுவதால் அணியில் சேர்க்கப்படுகிறார்: மனம் திறந்த இந்திய பந்துவீச்சாளர்

குல்தீப் யாதவ் சிறப்பாக பந்து வீசுகிறார் எனவும், அதன் காரணத்தினாலேயே அணி நிர்வாகம் அவரைத் தொடர்ந்து அணியில் சேர்க்கிறது எனவும் இந்திய அணியின் யுஸ்வேந்திர சஹால் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2023, 10:05 am

DIN

குல்தீப் யாதவ் சிறப்பாக பந்து வீசுகிறார் எனவும், அதன் காரணத்தினாலேயே அணி நிர்வாகம் அவரைத் தொடர்ந்து அணியில் சேர்க்கிறது எனவும் இந்திய அணியின் சுழல் பந்துவீச்சாளர்களில் ஒருவரான யுஸ்வேந்திர சஹால் தெரிவித்துள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரில் சஹால் அணியில் இடம் பெறவில்லை. ஐபிஎல் போட்டிகளுக்குப் பிறகு மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டி20 போட்டியில்தான் அணியில் மீண்டும் இணைந்தார். மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் அவர் வீசிய முதல் ஓவரிலேயே இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இருப்பினும், அந்தப் போட்டியில் இந்திய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 

இந்த நிலையில், குல்தீப் யாதவ் சிறப்பாக பந்து வீசுகிறார் எனவும், அதன் காரணத்தினாலேயே அணி நிர்வாகம் அவரைத் தொடர்ந்து அணியில் சேர்க்கிறது எனவும் சஹால் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. 

Story image

இது தொடர்பாக அவர் பேசியதாவது: அணியில் ஆட்டத்திற்கு ஏற்றவாறு பந்துவீச்சாளர்கள் தேர்வு செய்யப்படுவது இருக்க வேண்டும். அதற்குத் தான் நாங்கள் முக்கியத்துவம் கொடுப்போம். இது ஒன்றும் புதிதல்ல. ஆடுகளம் சுழல் பந்துவீச்சுக்கு ஏற்றவாறு இருந்தால் மூன்று சுழற்பந்துவீச்சாளர்கள் மட்டுமே அணியில் இடம்பெற முடியும். குல்தீப் சிறப்பாக பந்து வீசுகிறார். அதன் காரணத்தினால் தான் அவருக்கு அணி நிர்வாகம் ஆடும் லெவனில் வாய்ப்பு வழங்குகிறது. நான் தொடர்ந்து வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளேன். எப்போதெல்லாம் எனக்கு வாய்ப்பு அளிக்கப்படுகிறதோ அப்போதெல்லாம் அதனை நன்றாக பயன்படுத்திக் கொள்வேன் என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.