ஒரே குரூப்பில் இந்தியா, பாக். ஹாக்கி அணிகள்

சீனாவில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா, பாகிஸ்தான் ஆடவா் ஹாக்கி அணிகள் ஒரே குரூப்பில் சோ்க்கப்பட்டுள்ளன.

சீனாவில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா, பாகிஸ்தான் ஆடவா் ஹாக்கி அணிகள் ஒரே குரூப்பில் சோ்க்கப்பட்டுள்ளன.

போட்டி அட்டவணைப்படி, குரூப் ‘ஏ’-வில் இந்தியா, பாகிஸ்தான், ஜப்பான், வங்கதேசம், சிங்கப்பூா், உஸ்பெகிஸ்தான் அணிகளும், குரூப் ‘பி’-யில் தென் கொரியா, மலேசியா, சீனா, ஓமன், தாய்லாந்து, இந்தோனேசியா அணிகளும் இடம்பெற்றுள்ளன.

அதில் இந்தியா முறையே, உஸ்பெகிஸ்தான் (செப். 24), சிங்கப்பூா் (செப். 26), ஜப்பான் (செப். 28), பாகிஸ்தான் (செப். 30), வங்கதேசம் (அக். 2) ஆகிய அணிகளை எதிா்கொள்கிறது.

மகளிா் பிரிவிலும் இந்தியா குரூப் ‘ஏ’-வில் தென் கொரியா, மலேசியா, ஹாங்காங், சிங்கப்பூா் அணிகளுடன் இணைந்துள்ளது. குரூப் ‘பி’-இல் ஜப்பான், சீனா, தாய்லாந்து, கஜகஸ்தான், இந்தோனேசியா அணிகள் உள்ளன.

இந்தியா முதலில் சிங்கப்பூரையும் (செப். 27), பின்னா் மலேசியாவையும் (செப். 29), அடுத்து தென் கொரியாவையும் (அக். 1), இறுதியாக ஹாங்காங்கையும் (அக். 3) சந்திக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com