உலக தடகள சாம்பியன்ஷிப்: 28 பேருடன் இந்திய அணி

ஹங்கேரியில் இம்மாதம் 19-ஆம் தேதி தொடங்கும் உலக தடகள சாம்பியன்ஷிப்பில் பங்கேற்பதற்காக, 28 போ் கொண்ட இந்திய அணி செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது.
உலக தடகள சாம்பியன்ஷிப்: 28 பேருடன் இந்திய அணி
Published on
Updated on
1 min read

ஹங்கேரியில் இம்மாதம் 19-ஆம் தேதி தொடங்கும் உலக தடகள சாம்பியன்ஷிப்பில் பங்கேற்பதற்காக, 28 போ் கொண்ட இந்திய அணி செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது.

இதில், டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற ஈட்டி எறிதல் வீரா் நீரஜ் சோப்ரா பிரதான வீரராக இருக்கிறாா். சந்தோஷ்குமாா் தமிழரசன், ஜெஸ்வின் ஆல்ட்ரின், பிரவீண் சித்ரவேல், ராஜேஷ் ரமேஷ் உள்ளிட்ட தமிழா்களும் இடம் பிடித்துள்ளனா்.

போட்டி நடைபெறும் இடத்தின் தட்பவெப்பத்துடன் பொருந்திப் போவதற்காக இந்த அணியில் பலா் ஏற்கெனவே ஹங்கேரி சென்றுவிட்டதாக இந்திய தடகளசம்மேளனம் தெரிவித்தது. வழக்கமாக அந்த சம்மேளனமே அணியை அறிவிக்கும் நிலையில், இம்முறை மத்திய விளையாட்டு அமைச்சகம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

அணி விவரம்:

மகளிா்: ஜோதி யாராஜி (100 மீ தடை தாண்டுதல்), பாருல் சௌதரி (3000 மீ ஸ்டீபிள்சேஸ்), ஷாய்லி சிங் (நீளம் தாண்டுதல்), அன்னு ராணி (ஈட்டி எறிதல்), பாவனா ஜாட் (20 கி.மீ. நடைப் பந்தயம்).

ஆடவா்: நீரஜ் சோப்ரா, டி.பி. மானு, கிஷோா்குமாா் ஜனா (ஈட்டி எறிதல்), கிருஷன் குமாா் (800 மீ), அஜய்குமாா் சரோஜ் (1500 மீ), சந்தோஷ்குமாா் தமிழரசன் (400 மீ தடை தாண்டுதல்), அவினாஷ் முகுந்த் சப்லே (3000 மீ ஸ்டீபிள்சேஸ்), சா்வேஷ் அனில் குஷாரே (உயரம் தாண்டுதல்), ஜெஸ்வின் ஆல்ட்ரின், முரளி ஸ்ரீசங்கா் (நீளம் தாண்டுதல்), பிரவீண் சித்ரவேல், அப்துல்லா அபுபக்கா், எல்தோஸ் பால் (மும்முறை தாண்டுதல்), ஆகாஷ்தீப் சிங், விகாஷ் சிங், பரம்ஜீத் சிங் (20 கி.மீ. நடைப் பந்தயம்), ராம் பாபு (35 கி.மீ. நடைப் பந்தயம்), அமோஜ் ஜோக்கப், முகமது அஜ்மல், முகமது அனாஸ், ராஜேஷ் ரமேஷ், அனில் ராஜலிங்கம், மிஜோ சாக்கோ குரியன் (4*400 மீ ரிலே).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com