டெஸ்ட் கிரிக்கெட்டில் ஹசரங்கா ஓய்வு!
By DIN | Published On : 15th August 2023 02:19 PM | Last Updated : 15th August 2023 02:19 PM | அ+அ அ- |

ஹசரங்கா(கோப்புப் படம்)
டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இலங்கை அணியின் ஆல்ரவுண்டர் வனிந்து ஹசரங்கா செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளார்.
இலங்கை அணியின் இளம் ஆல்ரவுண்டராக இருப்பவர் ஹசரங்கா(வயது 26). இவர் 2017 முதல் இலங்கை அணிக்காக சர்வதேச போட்டிகளில் விளையாடி வருகிறார்.
தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக 2020-ஆம் ஆண்டு முதல்முறையாக டெஸ்ட் போட்டியில் அறிமுகமான ஹசரங்கா, கடைசியாக வங்கதேசத்துக்கு எதிராக 2021-ஆம் ஆண்டு விளையாடினார்.
மொத்தம் 4 டெஸ்ட் தொடரில் மட்டுமே விளையாடியுள்ள ஹசரங்கா, 4 விக்கெட்டுகள் மட்டுமே வீழ்த்தியுள்ளார்.
இந்த நிலையில், டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் கவனம் செலுத்துவதற்காக டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்துள்ளார். இவரின் முடிவை இலங்கை கிரிக்கெட் வாரியம் ஏற்றுக் கொண்டது.
இதையும் படிக்க | மிக மிகச் சாதாரண அணியாகிவிட்டது இந்தியா
இலங்கை அணிக்காக 48 ஒருநாள், 58 டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள ஹசரங்கா, 158 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். 1,365 ரன்கள் எடுத்துள்ளார்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...