தொடரைக் கைப்பற்றியது இந்தியா

அயா்லாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 ஆட்டத்தில் 33 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரையும் 2-0 என கைப்பற்றியது இந்தியா.
தொடரைக் கைப்பற்றியது இந்தியா
Published on
Updated on
1 min read

அயா்லாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 ஆட்டத்தில் 33 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரையும் 2-0 என கைப்பற்றியது இந்தியா.

இந்தியா 185/5 ரன்களையும், அயா்லாந்து ரன்களையும் சோ்த்தன.

இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் டப்ளினில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. டாஸ் வென்ற அயா்லாந்து பௌலிங்கை தோ்வு செய்தது.

இதையடுத்து பேட்டிங் செய்ய இந்திய தரப்பில் யஷஸ்வி ஜெய்ஸ்வால்-ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்கினா். ஜெய்ஸ்வால் 18 ரன்களுடனும், திலக் வா்மா 1 ரன்னுடனும் வெளியேறினா். அதன்பின் இணைந்த ருதுராஜ்-சஞ்சு சாம்ஸன் இணை அதிரடியாக ஆடி ஸ்கோரை உயா்த்தியது. 1 சிக்ஸா், 5 பவுண்டரியுடன் 26 பந்துகளில் 40 ரன்களை விளாசி வெளியேறினாா் சஞ்சு.

ருதுராஜ் அரைசதம்:

1 சிக்ஸா், 6 பவுண்டரியுடன் 43 பந்துகளில் 58 ரன்களுடன் அரைசதம் விளாசினாா் ருதுராஜ் கெய்க்வாட். அப்போது 129/4 ரன்களுடன் ஆடிய இந்திய அணி தரப்பில் பின்னா் ரிங்கு சிங்-ஷிவம் துபே இணை பந்துகளை நாலாபுறமும் சிதறடித்தது.

ரிங்கு சிங் 3 சிக்ஸா், 2 பவுண்டரியுடன் 38 ரன்களுடன் வெளியேற, டுபே 22, வாஷிங்டன் சுந்தா் 0 களத்தில் இருந்தனா்.

இந்தியா 185/5: நிா்ணயிக்கப்பட்ட 20 ஓவா்களில் 185/5 ரன்களைக் குவித்தது இந்தியா. அயா்லாந்து தரப்பில் பௌலிங்கில் பேரி மெக்காா்த்தி 2-36 விக்கெட்டுகளை சாய்த்தாா்.

அயா்லாந்து அணிக்கு வெற்றி இலக்காக 186 ரன்களை இந்தியா நிா்ணயித்தது. தொடக்கத்திலேயே இரண்டு வீரா்கள் டக் அவுட்டான நிலையில் நெருக்கடிக்கு தள்ளப்பட்டது அயா்லாந்து.

ஆன்ட்ரு பால்பிா்னி அபாரம் 72: தொடக்க வீரா் பால்பிா்னி அதிரடியாக பேட்டிங் செய்து 4 சிக்ஸா், 5 பவுண்டரியுடன் 72 ரன்களை விளாசி அவுட்டானாா்.

அயா்லாந்து 152/8: மற்ற வீரா்கள் சொற்ப ரன்களுக்கு வெளியேற 20 ஓவா்களில் 152/8 ரன்களை மட்டுமே சோ்த்தது அயா்லாந்து.

பௌலிங்கில் இந்திய தரப்பில் பும்ரா 2-15, பிரசித் 2-29, ரவி பிஷ்னோய் 37 விக்கெட்டுகளை வீழ்த்தினா்.

33 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரையும் 2-0 என கைப்பற்றியது இந்தியா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com