சின்சினாட்சி ஓபன் டென்னிஸ் போட்டி ஆடவா் இறுதி ஆட்டத்தில் உலகின் நம்பா் 1 வீரா் காா்லோஸ் அல்காரஸும், 23 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் ஜோகோவிச்சும் மோதினர்.
3 மணி நேரம் 49 நிமிடங்கள் நடந்த ஆட்டத்தில் இறுதிச் சுற்றில் முதல் செட்டை 5-7 என ஜோகோவிச் இழந்தாலும் இரண்டாவது மூன்றாவது செட் முறையே 7-6(7), 7-6(4) என கைப்பற்றினார். விம்பிள்டனில் விட்டதை இங்கு சாதித்து காட்டினார் ஜோகோவிச்.

இது ஜோகோவிச்சின் 3வது சின்சினாட்சி ஓபன் சாம்பியன் பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. 2012இல் ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் ரபேல் நடாலிடம் 5 மணி நேரம் 53 நிமிடங்கள் விளையாடியது போலிருந்ததாக கூறினார்.

இதையும் படிக்க: ஆசியக் கோப்பை இந்திய அணி அறிவிப்பு: திலக் வர்மாவுக்கு வாய்ப்பு
இந்த வெற்றிக்குப் பிறகு ஜோகோவிச், “எனது வாழ்க்கையில் இந்த மாதிரி போட்டிகள் அதிகம் விளையாடவில்லை. இதை நான் 2012இல் ரஃபேல் நடாலுடன் ஆடியதை ஒப்பிடுவேன். இந்த 3 செட்டுகளும் கிட்டதட்ட 4 மணி நேரம் விளையாடினோம். 20 வயதில் அல்காரஸ் அழுத்ததினை சிறப்பாக கையாண்டார். நான் நடாலினை எதிர்கொண்டது போல இருந்தது அலகாரஸ் விளையாடியதும்” எனக் கூறினார்.
"Boy, you never give up" @DjokerNole knows a thing or two about facing 'never-say-die' Spaniards...@carlosalcaraz | @CincyTennis | #CincyTennis pic.twitter.com/7sYEnAJKue
â ATP Tour (@atptour) August 21, 2023
மேலும், ஜோகோவிச், “அலகராஸ் விட்டுக் கொடுக்கவே இல்லை” எனக் கூறிக்கொண்டிருக்கும் போது அல்காரஸ், “ஸ்பானியர்கள்..”என கூற வந்தார். உடனே ஜோகோவிச், “ஆமாம், ஸ்பானியர்கள் எளிதில் விட்டுக் கொடுக்கமாட்டார்கள். நான் இதை முன்பே கேட்டிருக்கிறேன். அனுபவித்தும் இருக்கிறேன்” என ஜாலியாக கூறினார்.
Big Titles + Big Three @DjokerNole extends his lead after his victory in Cincinnati! pic.twitter.com/k7bMNvdfaw
â ATP Tour (@atptour) August 21, 2023
அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற பட்டியலில் ஜோகோவிச் 23 உடன் முதல் நிலையில் இருக்கிறார். நடால் (22) இரண்டாமிடம். பெடரர் (20) 3வது இடத்தில் இருக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருச்சி அரசு மருத்துவமனையில் விரைவில் சூரியஒளி மின்சாரத் திட்டம்

ஷேக் ஹசீனாவும் இந்தியாவின் தா்மசங்கடமும்...
சிப்காட் விவகாரம்: கருத்துக் கேட்பு கூட்டத்தை வலியுறுத்தும் கிராமத்தினா்

மேட்டூர் அணை நிலவரம்!
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



