இங்கிலாந்து வேகப் பந்துவீச்சாளர் ஜோஷ் டங் காயம் காரணமாக நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரிலிருந்து விலகியுள்ளார்.
நியூசிலாந்து அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டி20 தொடர் வருகிற ஆகஸ்ட் 30 ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது.
இதையும் படிக்க: உலகக் கோப்பையில் தாக்கத்தை ஏற்படுத்த தயாராகும் நெதர்லாந்து!
இந்த நிலையில், காயம் காரணமாக விலகியுள்ள ஜோஷ் டங்குக்குப் பதிலாக இங்கிலாந்து அணியில் அந்த அணியின் ஆல்ரவுண்டர் கிறிஸ் ஜோர்டன் சேர்க்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் சார்பில் தெரிவித்துள்ளதாவது: இங்கிலாந்து அணியில் காயம் காரணமாக நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரிலிருந்து விலகியுள்ள ஜோஷ் டங்குக்குப் பதிலாக கிறிஸ் ஜோர்டன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: யோ யோ உடற்தகுதி தேர்வில் விராட் கோலியை முந்திய ஷுப்மன் கில்!
34 வயதாகும் கிறிஸ் ஜோர்டன் இங்கிலாந்து அணிக்காக டி20 போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் ஆவார். இங்கிலாந்து அணிக்காக 87 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள கிறிஸ் ஜோர்டன் 96 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருமயம் சட்டப்பேரவைத்தொகுதி தவெக வேட்பாளா்!

மேற்காசிய மோதலுக்கிடையே இந்தியர்களின் பாதுகாப்பிற்கு மத்திய அரசு முன்னுரிமை: பிரதமர்

திருமலையில் 82,040 போ் தரிசனம்

புதிதாக முதுநிலை, உயா் சிறப்பு மருத்துவப் படிப்புகள்: விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
வீடியோக்கள்
Jawahirullah interview | அதிமுக, பாஜகவுக்கு உதவ இறக்கிவிடப்பட்டவர் Vijay | Dinamani | Election 2026
தினமணி வீடியோ செய்தி...

#ipl2026 | சிஎஸ்கேவில் சஞ்சு சாம்சன், ராஜஸ்தானில் ஜடேஜா: இதுதாண்டா ஆட்டம்! | MS Dhoni | RR vs CSK |
தினமணி வீடியோ செய்தி...

164 தொகுதிகளின் திமுக வேட்பாளர்களை அறிவித்த முதல்வர் ஸ்டாலின்! | DMK candidates | MK Stalin
தினமணி வீடியோ செய்தி...

முக்கிய வீரர்கள் விலகல்: ஐபிஎல் சுவாரசியமாக இருக்குமா?
தினமணி வீடியோ செய்தி...

