ஒரே ஓவரில் 101, 107, 102, 95 மீட்டர்களுக்கு சிக்ஸர் அடித்த பொல்லார்ட் ! (விடியோ)
By DIN | Published On : 28th August 2023 03:43 PM | Last Updated : 28th August 2023 03:43 PM | அ+அ அ- |

படம்: ட்விட்டர் | சிபிஎல் டி20
கரீபியன் ப்ரீமியர் லீக்கின் 12வது போட்டியில் டிகேஆர்(டிரின்பாகோ நைட் ரைடர்ஸ்) அணிக்கு எஸ்கேஎன்பி (செயிண்ட் கிட்ஸ் அண்ட் பாட்ரியாட்ஸ்) அணி 20 ஓவர்களுக்கு 179 ரன்களை இலக்காக நிர்ணயித்து. இதில் அதிகபட்சமாக ரூதர்போர்ட் 62 ரன்கள் எடுத்தார்.
இதையும் படிக்க: வரலாறு படைத்தாா் நீரஜ் சோப்ரா: உலக தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற முதல் இந்திய வீரா்
அடுத்து ஆடிய டிகேஆர் அணி 17.1 ஓவர்களுக்கு 180 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதில் நிகோலஸ் பூரன் அதிகபட்சமாக 961 ரன்களும் டுக்கர் 36 ரன்களும் பொலார்ட் 37 ரன்களும் ரஸ்ல் 8 பந்துகளில் 23 ரன்களும் எடுத்து வெற்றிக்கு வித்திட்டனர்.
இதையும் படிக்க: இந்திய அணியுடன் நினைவுகளை உருவாக்க விரும்புகிறேன்: ரோஹித் சர்மா
எஸ்கேஎன்பி அணியின் நவீத் வீசிய 15வது ஒவரில் கேப்டன் பொல்லார்ட் 4 சிக்ஸர்கள் அடித்து அசத்தினார். இதில் முதல் சிக்ஸர் ஓவரின் 2வது பந்திற்கு வந்தது. அடுத்து 4,5,6வது பந்துகளுக்கு தொடர்ந்து மூன்று சிக்ஸர்கள் அடித்தார் பொல்லார்ட். இதில் முதல் 3 சிக்ஸர்களும் (101,107,102) 100 மீட்டர்களுக்கு அதிகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. கடைசி சிக்ஸர் மட்டும் 95 மீட்டரில் விழுந்தது.
Wowza @KieronPollard55 SMASHES 4 meter sixes in a row #CPL23 #SKNPvTKR #CricketPlayedLouder #BiggestPartyInSport #BetBarter pic.twitter.com/qVpn0fRKA1
— CPL T20 (@CPL) August 28, 2023
இந்த விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தற்போது பயிற்சியாளராக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...