இந்திய அணியுடன் நினைவுகளை உருவாக்க விரும்புகிறேன்: ரோஹித் சர்மா

அடுத்த இரண்டு மாதங்களுக்கு இந்திய அணியுடனான நினைவுகளை உருவாக்க விரும்புவதாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். 
இந்திய அணியுடன் நினைவுகளை உருவாக்க விரும்புகிறேன்: ரோஹித் சர்மா

அடுத்த இரண்டு மாதங்களுக்கு இந்திய அணியுடனான நினைவுகளை உருவாக்க விரும்புவதாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். 

50 ஓவர் உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் வருகிற அக்டோபர் 5 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெறவுள்ளது. இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பை என்பதாலும், ஐசிசி நடத்தும் தொடர்களில் கடந்த 10  ஆண்டுகளாக இந்திய அணி சாம்பியன் பட்டம் வெல்லாததாலும் இந்திய அணியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த முறை இந்திய அணி கண்டிப்பாக உலகக் கோப்பையை கைப்பற்றும் என பலரும் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், அடுத்த இரண்டு மாதங்களுக்கு இந்திய அணியுடனான நினைவுகளை உருவாக்க விரும்புவதாக இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். பிடிஐ-க்கு அளித்த பிரத்யேக நேர்காணலில் இதனை அவர் தெரிவித்தார்.

அந்த நேர்காணலில் அவர் கூறியதாவது: எந்த ஒரு புறக்காரணிகள் குறித்தும் யோசிக்காமல் நான் பதற்றமின்றி இருக்க என்னை தயார் படுத்திக் கொள்கிறேன். 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக எப்படி இருந்தேனோ அதே போன்று இருக்க வேண்டும். அந்த தொடரில் நான் சிறந்த தயார் நிலையில் இருந்தேன். சிறப்பான ஆட்டத்தையும் வெளிப்படுத்தினேன். அதனை இந்த உலகக் கோப்பை தொடரில் மீண்டும் கொண்டு வர வேண்டும். ஒரு மாதத்தில் ஒருவர் சிறப்பாக விளையாடுகிறார் அல்லது அல்லது விளையாடவில்லை எனக் கூறிவிட முடியாது. ஒரே நாளில் ஒருவரின் வெற்றிகளும் அல்லது தோல்விகளும் பெரிதாக மாறி விடாது. உலகக் கோப்பையை வெல்வது மட்டும் என்னை சிறப்பான வீரராக மாற்றும் என நான் நினைக்கவில்லை. அடுத்த இரண்டு மாதங்களுக்கு நான் எனது கவனத்தை உலகக் கோப்பை தொடரின் மீது வைக்க வேண்டும். எனது அணியினருடன் நினைவுகளை உருவாக்க வேண்டும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com