உலக பாட்மின்டன் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள பாட்மின்டன் வீரர்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் பிரனோய் 6-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
முன்னதாக 7-வது இடம் பெற்றதே அவரது சிறந்த தரவரிசையாக இருந்த நிலையில், தற்போது 6-வது இடத்துக்கு முன்னேறி அதனை மாற்றியுள்ளார் பிரனோய். அண்மையில் நடைபெற்ற பாட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் அவர் சிறப்பாக செயல்பட்டதே அவரது தரவரிசையில் ஏற்பட்ட இந்த முன்னேற்றத்திற்கு காரணம். குறிப்பாக, உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் சிறப்பாக செயல்பட்டு வெண்கலப் பதக்கத்தை வென்றதே உலக பாட்மின்டன் தரவரிசைப் பட்டியல் முன்னேற்றத்துக்கு முக்கிய காரணம்.
உலக பாட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் அரையிறுதியில் பிரனோய், பாட்மின்டன் தரவரிசையில் உலக அளவில் 3-வது இடத்தில் உள்ள குன்லாவத் விதித்சர்னிடம் 21-18, 13-21, 14-21 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார்.
பாட்மின்டன் தரவரிசையில் உலக அளவில் 2-வது இடத்தில் இருக்கும் விக்டர் அக்ஷெல்சனை வீழ்த்தி பிரனோய் வெண்கலப் பதக்கத்தை உறுதி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டிரினிடாட் டொபேகோ நாட்டு பிரதமருடன் ஜெய்சங்கா் சந்திப்பு

வாசுதேவநல்லூா் அருகே நாய் கடித்து 6 போ் காயம்
கரண்டிகளையும் சாப்பிடலாம்!
29 கி.மீ. கடல் நீச்சல்...
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

