நான் செய்ததில் தவறு ஒன்றுமில்லை; முடிவுக்கு வராத மிட்செல் மார்ஷின் உலகக் கோப்பை சர்ச்சை!

உலகக் கோப்பையை தான் அவமதிக்கவில்லை எனவும், மீண்டும் அந்த செயலில் ஈடுபடுவதும் எனக்குத் தவறாக தெரியவில்லை எனவும் ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷ் தெரிவித்துள்ளார். 
நான் செய்ததில் தவறு ஒன்றுமில்லை; முடிவுக்கு வராத மிட்செல் மார்ஷின் உலகக் கோப்பை சர்ச்சை!

உலகக் கோப்பையை தான் அவமதிக்கவில்லை எனவும், மீண்டும் அந்த செயலில் ஈடுபடுவதும் எனக்குத் தவறாக தெரியவில்லை எனவும் ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷ் தெரிவித்துள்ளார். 

உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியாவை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி 6-வது முறையாக ஆஸ்திரேலியா கோப்பையை வென்றது. இந்தியாவை ஆஸ்திரேலியா வீழ்த்தி கோப்பையை வென்ற பிறகு ஆஸ்திரேலிய அணியின் கேப்டன்  பாட் கம்மின்ஸ், மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பையின் மீது தனது காலை வைத்து அமர்ந்திருக்கும் புகைப்படத்தை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார்.

அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி இந்திய ரசிகர்களை கோபம் கொள்ளச் செய்தது. உலகக் கோப்பையை மிட்செல் மார்ஷ் அவமதித்துவிட்டதாக பலரும் விமர்சனங்களை முன்வைத்தனர். இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர்களில் ஒருவரான முகமது ஷமியும் மிட்செல் மார்ஷின் இந்த செயல் தனக்கு மகிழ்ச்சியைத் தரவில்லை எனத் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், உலகக் கோப்பையை தான் அவமதிக்கவில்லை எனவும், மீண்டும் அந்த செயலில் ஈடுபடுவதும் எனக்குத் தவறாக தெரியவில்லை எனவும் ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷ் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் பேசியதாவது: பாட் கம்மின்ஸ் பகிர்ந்த அந்தப் புகைப்படத்தில் உண்மையில் எந்த ஒரு அவமரியாதையும் இல்லை. நான் எனது அந்த செயல் குறித்து அதிகமாக கவனம் கொடுக்கவில்லை. சமூக ஊடகங்களில் எனது இந்த செயல் குறித்து அதிக விமர்சனங்கள் வருவதாக அனைவரும் கூறியபோதும், நான் அது குறித்து அதிகமாக சிந்திக்கவில்லை. எனது செயலை பெரிதுப்படுத்தும் அளவுக்கு அதில் ஒன்றுமில்லை. உண்மையை சொல்ல வேண்டுமென்றால் நான் மீண்டும் அவ்வாறு செய்தாலும் அதனை அவமதிப்பாக நான் கருதமாட்டேன் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com