சொந்த மண்ணில் வரலாற்று சாதனை படைத்த வங்கதேசம்!

நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் வங்கதேசம் அணி வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது. 
சொந்த மண்ணில் வரலாற்று சாதனை படைத்த வங்கதேசம்!
Published on
Updated on
1 min read

ஆட்டம் சனிக்கிழமையுடன் நிறைவடையும் நிலையில், 332 ரன்களை இலக்காகக் கொண்டு விளையாடி வரும் நியூஸிலாந்து, வெள்ளிக்கிழமை முடிவில் 113 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்திருக்கிறது. கடைசி நாளில் வங்கதேசம் எஞ்சிய விக்கெட்டுகளையும் இழந்து 150 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசம் வெற்றி பெற்றது. 

கடந்த மாதம் 28-ஆம் தேதி தொடங்கிய இந்த ஆட்டத்தில் முதலில் வங்கதேசம் 310 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து தனது இன்னிங்ஸை ஆடிய நியூஸிலாந்து 317 ரன்களுக்கு முடித்துக் கொண்டது. 2-ஆவது இன்னிங்ஸை ஆடிவந்த வங்கதேசம் 338/10 ரன்கள் எடுத்தது. ஷாண்டோ சதமடித்து அசத்தினார். 

4-ஆம் நாளான வெள்ளிக்கிழமை முடிவில் டேரில் மிட்செல் 44, இஷ் சோதி 7 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். சனிக்கிழமையான இன்று 181 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது நியூசி. 

 தைஜுல் இஸ்லாம் உடன் முஷ்ஃபிகுர் ரஹீம்
 தைஜுல் இஸ்லாம் உடன் முஷ்ஃபிகுர் ரஹீம்

வங்கதேச தரப்பில் தைஜுல் இஸ்லாம் 6 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். ஷோரிஃபுல் இஸ்லாம், மெஹிதி ஹசன் மிராஸ் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் நயீம் ஹசன் 2 விக்கெட்டும் எடுத்தனா். 

நியூசி.க்கு எதிராக இது வங்க தேசத்தின் 2வது டெஸ்ட் வெற்றி. தங்கள் சொந்த மண்ணில் முதன்முறையாக நியூசிலாந்தை வீழ்த்தி வரலாற்று சாதனையை பதிவு செய்துள்ளது. இதன்மூலம் உலக டெஸ்ட் சாம்பிய்ன்ஷிப் புள்ளீப் ப்ட்டியலில் 2வது இடத்துக்கு வங்கதேசம் முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com