இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஆஸ்திரேலிய அணி 6-வது உலகக் கோப்பையை வென்றுள்ளது. பேட்டிங், பௌலிங் மற்றும் ஃபீல்டிங் என அனைத்துத் துறைகளிலுமே ஆஸ்திரேலிய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர். அவர்கள் மிகுந்த தன்னம்பிக்கையுடன் செயல்பட்டனர். ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் அணியை சிறப்பாக வழிநடத்தினார். அவர் எப்போதும் சிறந்த கேப்டனாக இருக்கப் போகிறார். அவர் ஆஸ்திரேலிய அணியின் மிகவும் உத்வேகமான வீரர். கிரிக்கெட் குறித்த பொதுவான அறிவு அவருக்கு சிறப்பாக உள்ளது. கிரிக்கெட் வீரர் ஒருவர் கம்மின்ஸைப் பார்த்து உத்வேகம் பெறவில்லையென்றால், அவர் போட்டியை தவறாக விளையாடுகிறார் என்றே அர்த்தம் என்றார்.