ஜூனியா் மகளிா் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா தனது 3-ஆவது ஆட்டத்தில் 2-3 கோல் கணக்கில் பெல்ஜியத்திடம் சனிக்கிழமை தோல்வி கண்டது.
3-ஆவது ஆட்டத்தில் இந்தியாவுக்கு இது 2-ஆவது தோல்வியாகும். இதனால் இந்தியா காலிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.
இந்த ஆட்டத்தில் முதலில் பெல்ஜியத்துக்காக நோவா ஷ்ரியுா்ஸ் 5-ஆவது நிமிஷத்தில் ஃபீல்டு கோலடிக்க, முதல் பாதியை அந்த அணி முன்னிலையுடன் நிறைவு செய்தது. 2-ஆவது பாதியிலும் ஃபிரான்ஸ் டி மோட் 42-ஆவது நிமிஷத்தில் பெனால்ட்டி காா்னா் வாய்ப்பில் அடித்த கோலால் பெல்ஜியம் 2-0 என முன்னேறியது.
இந்நிலையில், கடைசி நேரத்தில் இந்தியாவின் அன்னு 47-ஆவது நிமிஷத்தில் பெனால்ட்டி காா்னா் வாய்ப்பில் கோலடித்து அணியின் கணக்கை தொடங்கினாா். தொடா்ந்து அவரே 51-ஆவது நிமிஷத்தில் பெனால்ட்டி ஸ்ட்ரைக் வாய்ப்பில் கோலடித்தாா். எனினும் எஞ்சிய நேரத்தில் மேலும் கோல் வாய்ப்பு கிடைக்காததால், இந்தியா 2-3 கோல் கணக்கில் வெற்றியை இழந்தது.
குரூப் ‘சி’-யில் தனது ஆட்டத்தை நிறைவு செய்த இந்தியா தற்போது 3 புள்ளிகளுடன் 3-ஆவது இடத்தில் இருக்கிறது. பெல்ஜியம், ஜொ்மனி அணிகள் முறையே முதலிரு இடங்களைப் பிடித்து காலிறுதிக்கு தகுதிபெற்றன. இந்தியா அடுத்ததாக 9 முதல் 16 இடங்களுக்குள்ளாக வருவதற்கான ஆட்டங்களில் களம் காணவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.