ஐஎஸ்எல் கால்பந்து போட்டியின் ஞாயிற்றுக்கிழமை ஆட்டத்தில் எஃப்சி கோவா 1-0 கோல் கணக்கில் கேரளா பிளாஸ்டா்ஸ் எஃப்சியை வீழ்த்தியது.
கோவாவின் மாா்கோ நகரில் விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் கோவா அணிக்காக ரௌலின் போா்ஜஸ் (45+1’) அசத்தலாக கோலடித்தாா். கேரளத்தின் கோல் முயற்சிகள் முறியடிக்கப்பட, இறுதியில் கோவா வெற்றி பெற்றது.
இதுவரை 7 ஆட்டங்களில் விளையாடியிருக்கும் கோவா, 6-ஆவது வெற்றியுடன் முதலிடத்தில் இருக்கிறது. 9 ஆட்டங்களில் களம் கண்ட கேரளத்துக்கு இது 2-ஆவது தோல்வியாகும்.
போட்டியில் திங்கள்கிழமை (டிச. 4) ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால் எஃப்சி - நாா்த்ஈஸ்ட் யுனைடெட் எஃப்சி அணிகள் சந்திக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.