டி20 உலகக் கோப்பைக்கான இலச்சினை வெளியீடு
அடுத்தாண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைக்கான இலச்சினையை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த அக்டோபர் மாதம் முதல் ஒன்றரை மாதம் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பையின் இறுதி ஆட்டத்தில் வென்று ஆஸ்திரேலிய அணி சாம்பியன் ஆனது.
இதனைத் தொடர்ந்து, மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அமெரிக்காவில் வருகின்ற ஜூன் மாதம் 4 முதல் 30 வரை டி20 ஆண்கள் உலகக் கோப்பை தொடரும், வங்கதேசத்தில் டி20 பெண்கள் உலகக் கோப்பை தொடரும் நடைபெறவுள்ளன.
இந்த தொடர்களுக்கான இலச்சினையை ஐசிசி நிர்வாகம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ளது.
மேலும், டி20 உலகக் கோப்பை தொடருக்கான போட்டிகள் குறித்த அட்டவணையும், டிக்கெட் விற்பனை குறித்த அறிவிப்பும் விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.