
வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் நியூசிலாந்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இரு அணிகளுக்கும் இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்டில் வங்கதேசம் வெற்றி பெற்ற நிலையில், இன்று (டிசம்பர் 9) நியூசிலாந்து இரண்டாவது டெஸ்டில் வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் டெஸ்ட் தொடரையும் சமன் செய்துள்ளது.
இதையும் படிக்க: மிட்செல் ஜான்சனின் விமர்சனத்துக்கு வார்னர் கொடுத்த பதில்!
3-ஆம் நாள் ஆட்டநேர முடிவில் வங்கதேசம் நியூசிலாந்தைக் காட்டிலும் 30 ரன்கள் முன்னிலை பெற்றிருந்த வங்கதேசம், இன்று இரண்டாவது இன்னிங்ஸில் 144 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. வங்கதேசம் தரப்பில் ஜாகிர் ஹாசன் அதிகபட்சமாக 59 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். நியூசிலாந்து தரப்பில் அஜாஸ் படேல் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். மிட்செல் சாண்ட்னர் 3 விக்கெட்டுகளையும், டிம் சௌதி ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
இதனையடுத்து, 137 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய நியூசிலாந்து 39.4 ஓவர்களில் இலக்கை எட்டி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது. நியூசிலாந்து அணியில் கிளன் பிளிப்ஸ் அதிகபட்சமாக 40 ரன்களும், மிட்செல் சாண்ட்னர் 35 ரன்களும் எடுத்து இறுதி வரை களத்தில் இருந்தனர். வங்கதேசம் தரப்பில் மெஹிதி ஹாசன் மிராஸ் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். தைஜுல் இஸ்லாம் 2 விக்கெட்டுகளையும், ஷோரிஃபுல் இல்ஸாம் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
இதையும் படிக்க: மீண்டும் பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் இணையும் சஞ்சய் பங்கார்!
நியூசிலாந்து அணியின் கிளன் பிளிப்ஸ் ஆட்டநாயகனாகவும், வங்கதேசத்தின் தைஜுல் இஸ்லாம் தொடர் நாயகனாகவும் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.