
துபை: ஐபிஎல் ஏலத்தில் இந்தியாவின் ஷர்துல் தாகூர் மற்றும் நியூசிலாந்தின் ரச்சின் ரவீந்திராவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எடுத்தது.
துபையில் ஐபிஎல் 2024ஆம் ஆண்டுக்கான ஏலம் நடைபெற்று வருகின்றன. இந்த ஏலத்தில் 10 அணிகளும் பங்கேற்றுள்ளன.
ஷர்துல் தாகூர்
அடிப்படை விலை: ரூ. 2 கோடி
இவரை ஏலத்தில் எடுக்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் முனைப்பு காட்டினர். இறுதியாக ரூ. 4 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எடுத்தது.
ரச்சின் ரவீந்திரா
அடிப்படை விலை: ரூ. 50 லட்சம்
இவரை ஏலத்தில் எடுக்க தில்லி கேபிடல்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் முனைப்பு காட்டினர். இறுதியாக ரூ. 1.8 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எடுத்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.