இந்த தருணம் வாழ்நாள் முழுவதும் நினைவிருக்கும்; மனம் திறந்த டேரில் மிட்செல்!

ஐபிஎல் ஏலத்தில் தனது பெயர் வந்ததும் இதயத்துடிப்பு அதிகரித்ததாகவும், அதிகத் தொகைக்கு ஏலமெடுக்கப்பட்ட தருணம் தனது மீதமுள்ள வாழ்நாள் முழுமைக்கும் நினைவிருக்கும்.
படம் | எக்ஸ் (ட்விட்டர்)
படம் | எக்ஸ் (ட்விட்டர்)

ஐபிஎல் ஏலத்தில் தனது பெயர் வந்ததும் இதயத்துடிப்பு அதிகரித்ததாகவும், அதிகத் தொகைக்கு ஏலமெடுக்கப்பட்ட தருணம் தனது மீதமுள்ள வாழ்நாள் முழுமைக்கும் நினைவிருக்கும் என நியூசிலாந்து வீரர் டேரில் மிட்செல் தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆண்டு ஐபிஎல் சீசனுக்கான மினி ஏலம் அண்மையில் துபையில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் நியூசிலாந்து வீரர் டேரில் மிட்செல் ரூ.14 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார். ஐபிஎல் வரலாற்றில் மிகவும் அதிக விலைக்கு ஏலமெடுக்கப்பட்ட இரண்டாவது நியூசிலாந்து வீரர் என்ற பெருமையையும் டேரில் மிட்செல் பெற்றார். அவருக்கு முன்னதாக, கடந்த 2021 ஆம் ஆண்டு நியூசிலாந்து வேகப் பந்துவீச்சாளர் கைல் ஜேமிசன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியால் ரூ.15 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். 

இந்த நிலையில், ஐபிஎல் ஏலத்தில் தனது பெயர் வந்ததும் இதயத்துடிப்பு அதிகரித்ததாகவும், அதிகத் தொகைக்கு ஏலமெடுக்கப்பட்ட தருணம் தனது மீதமுள்ள வாழ்நாள் முழுமைக்கும் நினைவிருக்கும் எனவும் டேரில் மிட்செல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஐபிஎல் ஏலம் நடைபெற்ற நாள் எனக்கும், எனது குடும்பத்துக்கும் மிகவும் சிறப்பான நாள். நாங்கள் அனைவரும் தொலைக்காட்சிப் பெட்டிக்கு முன்பு அமர்ந்து ஏலம் முழுவதையும் பார்த்துக் கொண்டிருந்தோம். எனது பெயர் தொலைக்காட்சியில் வந்ததும், நாங்கள் அனைவரும் கண் இமைக்காமல் ஏலத்தையே கவனித்து வந்தோம். ஏலத்தில் எனது பெயர் வந்தபோது இதயத் துடிப்பு அதிகரித்தது.

நேற்று எனது மகளின் பிறந்தநாள். எனது மூத்த மகளுக்கு அதிக அளவில் பரிசுகளை வாங்கி பரிசளித்தேன். அவளுக்கு எங்களது மகிழ்ச்சிக்கான காரணம் புரியவில்லை. ஆனால், மிகப் பெரிய தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டது எனது மகள்களின் எதிர்காலத்துக்கு கண்டிப்பாக உதவியாக இருக்கும். மிகப் பெரிய தொகைக்கு ஏலமெடுக்கப்பட்ட தருணம் எனது மீதமுள்ள வாழ்நாள் முழுமைக்கும் நினைவிருக்கும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com