சச்சின் டெண்டுல்கரின் 14 ஆண்டுகால சாதனையை வங்கதேச வீரர் சௌமியா சர்கார் முறியடித்துள்ளார்.
வங்கதேச அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இரு அணிகளும் முதலில் ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றன. இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது ஒருநாள் போட்டி நேற்று (டிசம்பர் 20) நடைபெற்றது. இந்தப் போட்டியில் வங்கதேச அணியின் தொடக்க ஆட்டக்காரர் சௌமியா சர்கார் அதிரடியாக 151 பந்துகளில் 169 ரன்கள் எடுத்து அசத்தினார். அதில் 22 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். இதன் மூலம், புதிய சாதனை ஒன்றையும் அவர் படைத்துள்ளார்.
இந்தியத் துணைக் கண்டத்திலிருந்து நியூசிலாந்தில் ஒருநாள் போட்டி ஒன்றில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார். இதற்கு முன்னதாக, கடந்த 2009 ஆம் ஆண்டு சச்சின் டெண்டுல்கர் 163 ரன்கள் எடுத்திருந்ததே அதிகபட்சமாக இருந்தது. அந்த சாதனையை சௌமியா சர்கார் 14 ஆண்டுகளுக்குப் பிறகு முறியடித்துள்ளார். சௌமியா சர்காருக்கு ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது.
இரு அணிகளுக்கும் இடையிலான இந்த 2-வது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் ஜூலை 28 - நேரலை
ரசிகர்களுக்கு ஓர் நற்செய்தி... மீண்டும் திரைக்கு வரும் ஹாரி பாட்டரின் 8 பாகங்கள்!
இந்து சமய அறநிலையத் துறையில் 2 ஐஏஎஸ் பணியிடங்கள் உருவாக்கம்!

மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்கா
விடியோக்கள்
கண்ணதாசன் கவிஞரான கதை| Kannadasan 100 | UN Kannan interview | Kaviyarasu|கண்ணதாசன் நூற்றாண்டு | EP -2



