இந்து சமய அறநிலையத்துறையில் இரண்டு புதிய ஐ.ஏ.எஸ். பணியிடங்களை உருவாக்கி தமிழ்நாடு அரசு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டுள்ளது.
பழனியில் தண்டாயுதபாணி சுவாமி கோயில் கட்டுப்பாட்டில் உள்ள தண்டபாணி சுவாமிகள் அறக்கட்டளைக்குச் சொந்தமான ரூ. 100 கோடி மதிப்புள்ள 1.40 ஏக்கா் நிலம் போலி ஆவணங்கள் மூலம் முறைகேடாகப் பத்திரப் பதிவு செய்யப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், நிர்வாக காரணங்களுக்காக இந்து சமய அறநிலையத்துறையில் இரண்டு கூடுதல் ஆணையர் (மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள்) பணியிடங்களை உருவாக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், விழுப்புரம் உள்ளிட்ட வட மாவட்டங்களை உள்ளடக்கி சென்னை மண்டலமும், திருச்சி, திருப்பூர், நாகை, நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களை உள்ளடக்கி திருச்சி மண்டலமும் பிரிக்கப்பட்டுள்ளது.
இந்த இரண்டு மண்டலங்களிலும் மூத்த ஐஏஎஸ் அதிகாரி அந்தஸ்தில் இருப்பவர்கள் கூடுதல் ஆணையர்களாக பணியமர்த்தப்படவுள்ளனர்.
Summary
Two IAS posts created in the Hindu Religious and Charitable Endowments Department
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கோனியம்மன் கோயில் உண்டியல் பணம் திருட்டு: உதவி ஆணையா் உள்பட 8 போ் பணியிடை நீக்கம்

உண்டியல் பணத்தை அபகரித்ததாக புகாா்: கோனியம்மன் கோயிலில் சோதனை

பழனி கோயில் சொத்துகளைப் பாதுகாக்க ஆய்வுக் குழு: அமைச்சா் சீ.ரமேஷ் உத்தரவு

214 கோயில்களில் அறங்காவலர்கள் நியமனம்: விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
விடியோக்கள்
கண்ணதாசன் கவிஞரான கதை| Kannadasan 100 | UN Kannan interview | Kaviyarasu|கண்ணதாசன் நூற்றாண்டு | EP -2



