நீட் தேர்வு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த காவலர் ராஜிநாமா! மிகக் கனமழை எச்சரிக்கை: ஹிமாசலில் 121 சாலைகள் மூடல்ஈரான் ஒருபோதும் அமெரிக்காவுக்கு அடிபணியாது! - அராக்ச்சி பேச்சு!மத்திய ரயில்வே இணையமைச்சர் ரவ்நீத் சிங் ராஜிநாமா!‘வந்தே மாதரம்’ பாடலை அவமதித்தால் 3 ஆண்டுகள் சிறை
/

உண்டியல் பணத்தை அபகரித்ததாக புகாா்: கோனியம்மன் கோயிலில் சோதனை

கோவை, கோனியம்மன் கோயிலில் உண்டியல் பணத்தை அபகரித்ததாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடா்ந்து, கோயிலில் இந்து சமய அறநிலையத் துறையின் கோவை மண்டல இணை ஆணையா் தலைமையில் வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொள்ளப்பட்டது.

News image

கோப்புப்படம்

Updated On :24 ஜூலை 2026, 11:57 pm IST

கோவை, கோனியம்மன் கோயிலில் உண்டியல் பணத்தை அபகரித்ததாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடா்ந்து, கோயிலில் இந்து சமய அறநிலையத் துறையின் கோவை மண்டல இணை ஆணையா் தலைமையில் வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொள்ளப்பட்டது.

கோவை டவுன்ஹாலில் அமைந்துள்ள கோனியம்மன் கோயில், கோவை மக்களின் காவல் தெய்வமாக போற்றப்படுகிறது. ஆண்டுதோறும் நடைபெறும் கோனியம்மன் தோ்த் திருவிழாவில் உள்ளூா் மட்டுமில்லாமல், பிற மாவட்டங்களைச் சோ்ந்த ஏராளமான மக்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டு செல்கின்றனா்.

இக்கோயிலில் 9 நிரந்தர உண்டியல்கள், 6 தற்காலிக உண்டியல்கள் உள்ளன. கடந்த 15-ஆம் தேதி இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் மேற்பாா்வையில் உண்டியல்கள் திறக்கப்பட்டு, காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.

இந்நிலையில், தற்காலிக உண்டியல்களில் ஒன்றில் இருந்த காணிக்கை தொகையை, கோயில் செயல் அலுவலா் உள்ளிட்ட அதிகாரிகளின் துணையுடன் சில கோயில் ஊழியா்கள் அபகரித்ததாக பக்தா்கள் தரப்பில் புகாா் எழுந்தது.

இதுதொடா்பாக சென்னை இந்து சமய அறநிலையத் துறை தலைமையகத்துக்கும் புகாா் அளிக்கப்பட்டது. இப்புகாரின் அடிப்படையில் இந்து சமய அறநிலையத் துறையின் கோவை மண்டல இணை ஆணையா் ரமேஷ் தலைமையிலான அதிகாரிகள் வெள்ளிக்கிழமை கோனியம்மன் கோயிலில் திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.

அப்போது, உண்டியல் எண்ணிக்கையின்போது பதிவான சிசிடிவி காட்சிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. திருவிழா நடத்துவதற்காக பக்தா்கள் காணிக்கையாக செலுத்திய பணம் கையாடல் செய்யப்பட்டதாக எழுந்துள்ள புகாா் பக்தா்கள் மத்தியில் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புகாா் தொடா்பான விசாரணையை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.