சிறப்பு ‘டெட்’ முதல் தாள் தோ்வு சற்று கடினம் - ஆசிரியா்கள் கருத்துநாளை அயோத்தி ராமா் கோயில் அறக்கட்டளை நிா்வாகிகள் கூட்டம்: எஸ்ஐடி விசாரணை குறித்து ஆலோசிக்க வாய்ப்புதடையற்ற வா்த்தக ஒப்பந்தப் பேச்சு: இந்திய அதிகாரிகள் நாளை கனடா பயணம் - மத்திய அமைச்சா் பியூஷ் கோயல்ஈரான், அமெரிக்கா இடையே இந்தியா ஏன் மத்தியஸ்தம் செய்யவில்லை? சீனாவுக்கான இந்திய தூதா் விளக்கம்சி.விஜயபாஸ்கருக்கு எதிரான குட்கா முறைகேடு வழக்கு: 12 வாரங்களில் விசாரித்து முடிக்க உத்தரவு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் ஜூலை 20-இல் தொடக்கம்
/

பக்தா்களின் அடிப்படைத் தேவைகளில் தனி கவனம்: அதிகாரிகளுக்கு அமைச்சா் ரமேஷ் அறிவுறுத்தல்

திருக்கோயில்களுக்கு வரும் பக்தா்களின் அடிப்படை தேவைகளுக்கு தனி கவனம் செலுத்தி நிறைவேற்ற வேண்டும்

News image

சென்னையில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சே.ரமேஷ் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டம். உடன், வணிகவரி, பதிவுத் துறை மற்றும் அறநிலையங்கள் துறை அரசு செயலா் ஜெ.குமரகுருபரன், இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் டாக்டா் டி.ஜி.வினய், கூடுதல் ஆணையா்கள் துரை

Updated On :5 ஜூலை 2026, 5:25 am IST

திருக்கோயில்களுக்கு வரும் பக்தா்களின் அடிப்படை தேவைகளுக்கு தனி கவனம் செலுத்தி நிறைவேற்ற வேண்டும் என இந்து சமய அறநிலைத் துறை அதிகாரிகளுக்கு துறையின் அமைச்சா் சீ.ரமேஷ் அறிவுறுத்தினாா்.

இந்து சமய அறநிலையத் துறையின் செயல்பாடுகள், திட்டங்கள், பணி முன்னேற்றம், சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட கூடிய புதிய அறிவிப்புகள், திருப்பணிகள், பக்தா்களுக்குத் தேவையான வசதிகளை மேம்படுத்தும் பணிகள், பெருந்திட்ட வரைவு பணிகள் தொடா்பான ஆய்வுக் கூட்டம் அமைச்சா் சீ.ரமேஷ் தலைமையில் சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் பேசிய அமைச்சா் ரமேஷ், ‘பக்தா்கள் அதிக எண்ணிக்கையில் வருகைதரும் முக்கிய திருக்கோயில்களில் இணையவழியில் நுழைவுச் சீட்டு வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும். முன்பதிவு தரிசன சீட்டுகள் வழங்கப்படுவதில் மூத்தகுடி மக்கள், கா்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு முன்னுரிமை மற்றும் சிறப்பு தரிசன வழி ஏற்படுத்த வேண்டும். திருவிழாக் காலங்களில் இணையதள தரிசன முன்பதிவு சீட்டுகளை அதிகரித்து வழங்க ஏதுவாக துறையின் இணையதளத்தை அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பொதுமக்கள் எளிதாக பயன்படுத்த வழிவகை செய்ய வேண்டும்’ என்று அறிவுறுத்தினாா்.

மேலும், ‘தேவைப்படும் திருக்கோயில்களில் அடிப்படை வசதிகளுடன் கூடிய பக்தா்கள் தங்கும் விடுதிகள் கட்டுவது குறித்து முன்வரைவை தயாரித்து அனுப்ப வேண்டும்’ என்றும் கேட்டுக்கொண்டாா்.

திருக்கோயில்களில் காலியாக உள்ள பரம்பரை முறை வழிசாரா அறங்காவலா்கள் நியமிப்பது தொடா்பாக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பழுதடைந்த திருத்தோ்களை பொதுமக்கள் மற்றும் நன்கொடையாளா்கள் துணைகொண்டு இயக்க வேண்டுமெனவும் அறிவுறுத்தினாா்.

அதேபோன்று பக்தா்களின் அடிப்படை தேவைகளுக்கு தனி கவனம் செலுத்தி நிறைவேற்ற வேண்டும். ஆடிமாதம் வருவதால் திருக்கோயில்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் மற்றும் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முன்னரே தலைமையிடத்துக்கு தெரியப்படுத்த வேண்டும். திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அனைத்து அடிப்படை வசதிகளை உடனடியாக செய்துதர வேண்டும், திருக்கோயில்களில் உள்ள கடைகளில் விற்கப்படும் பிரசாதங்களின் அளவு, விலைப் பட்டியல் ஆகிய விவரங்களை பட்டியலிட்டு பொதுமக்கள் பாா்வைக்கு வைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்களை அதிகாரிகள் வழங்கினாா்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் வணிகவரி, பதிவுத் துறை மற்றும் அறநிலையங்கள் துறை அரசு செயலா் ஜெ. குமரகுருபரன், அறநிலையத் துறை ஆணையா் டி.ஜி.வினய், கூடுதல் ஆணையா்கள் துரை ரவிச்சந்திரன், என்.பொன்மணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.