ஹாரி பாட்டர் திரைப்படம் வெளியாகி 25 ஆண்டு விழாவைக் கொண்டாடும் வகையில், இதன் 8 பாகங்களும் மீண்டும் திரையிடப்படவுள்ளன.
ஆங்கில எழுத்தாளர் ஜே.கே. ரௌலிங் எழுதி வெளியாகி சக்கைப்போடு போட்ட நாவல் ஹாரி பாட்டர். மாயஜாலத் தொடரான ஹாரி பாட்டருக்கு உலகமெங்கும் ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. இந்தியாவிலும் ஹாரி பாட்டர் படத்துக்கு மிகப்பெரிய ரசிகர்கள் படையே இருக்கின்றனர்.

ஏழு பாகங்கள் கொண்ட இப்புத்தகங்கள் உலகளவில் ஐம்பது கோடிக்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. புத்தகமாக மட்டுமின்றி, வார்னர் புரோஸின் தயாரிப்பில் 8 பாகங்களாக வெளியான இந்தப் படம் உலகளவில் தனக்கென தனி ரசிகர்களை உருவாக்கிக் கொண்டது. இந்த படங்களில் டேனியல் ராட்க்ளிப், ரூபர்ட் கிரின்ட் மற்றும் எம்மா வாட்சன் ஆகியோர் மூன்று முன்னணி கதாபாத்திரங்களில் நடித்தனர்.
2001 ஆம் ஆண்டு கிறிஸ் கொலாம்பஸ் இயக்கத்தில் வெளியான முதல் படமான “ஹாரி பாட்டர் அண்ட் தி சோர்சரர்ஸ் ஸ்டோன் - Harry Potter and the Sorcerer's Stone” வெளியாகி 25 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் விதமாக, ஹாரி பாட்டர் திரைப்படத்தின் 8 பாகங்களும் மீண்டும் திரையிடப்படவுள்ளன.

ஆக. 27 முதல் செப். 3 ஆம் தேதி வரை, 8 படங்களும் உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெளியாகின்றன.
இந்தப் பட வெளியீட்டின்போது, முதல் பாகத்தின் முற்பகுதியில் 12 நிமிஷத்துக்கு கூடுதல் காட்சிகள் இணைக்கப்பட்டுள்ளன. இந்தப் படங்களுக்கான டிக்கெட் முன்பதிவு வருகிற ஜூலை 31 ஆம் தேதி முதல் தொடங்குவதால் ஹாரி பாட்டரின் மாய ஜால உலகக் காண ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
Summary
Wands up, Potterheads! The excitement is on the rise because Harry Potter's 25th Anniversary celebration is set to take us back to Hogwarts once again.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தாய்லாந்தில் கணவருடன் பேபிமூன் கொண்டாடும் சமந்தா! படங்கள்

இந்தியா பந்துவீச்சு: மூத்த வீரர்களான ரோஹித், கோலி, கே.எல். ராகுல் சேர்ப்பு!
ஹாரி பாக்சா் கும்பலுடன் தொடா்புடைய 3 போ் கைது: தொழிலதிபரை கொல்லத் தீட்டப்பட்ட சதி முறியடிப்பு!

உலகைச் சுற்றி...
விடியோக்கள்
கண்ணதாசன் கவிஞரான கதை| Kannadasan 100 | UN Kannan interview | Kaviyarasu|கண்ணதாசன் நூற்றாண்டு | EP -2


