தடுமாறும் இந்தியா; தோள் கொடுக்கும் ராகுல்: அச்சுறுத்தும் ககிசோ ரபாடா

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டின் முதல் நாளில் இந்தியா 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 208 ரன்கள் சேர்த்திருக்கிறது. 
தடுமாறும் இந்தியா; தோள் கொடுக்கும் ராகுல்: அச்சுறுத்தும் ககிசோ ரபாடா

செஞ்சுரியன்: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட்டின் முதல் நாளில் இந்தியா 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 208 ரன்கள் சேர்த்திருக்கிறது. 
அணியின் பேட்டர்கள் சொற்ப ரன்களிலேயே ஆட்டமிழக்க, லோயர் மிடில் ஆர்டரில் வந்த கே.எல்.ராகுல் விக்கெட் சரிவைத் தடுத்து நிதானமாக ரன்கள் சேர்த்து வருகிறார். தென்னாப்பிரிக்க பெளலிங்கில் ககிசோ ரபாடா 5 விக்கெட்டுகள் சாய்த்து அசத்தியிருக்கிறார். வெளிச்சமின்மை, மழை காரணமாக ஆட்டம் முன்னதாகவே முடித்துக்கொள்ளப்பட்டது. 
முன்னதாக இந்த ஆட்டத்தின் முதலிரு நாள்களுக்கு மழை அச்சறுத்தல் இருக்கும் நிலையில், தொடக்க நாளிலேயே ஃபீல்டிங் பகுதியில் ஈரத்தன்மை காரணமாக டாஸ் வீசுவது தாமதமானது. பின்னர் வீசப்பட்ட டாûஸ வென்ற தென்னாப்பிரிக்கா, பேட் செய்யுமாறு இந்தியாவை அழைத்தது. இந்திய லெவனில், ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா முதுகுப் பிடிப்பு காரணமாக பங்கேற்காமல் போக, பிரசித் கிருஷ்ணா அறிமுக டெஸ்ட் வாய்ப்பு பெற்றார். தென்னாப்பிரிக்க தரப்பில் பேட்டர் டேவிட் பெடிங்காம், ஆல்-ரவுண்டர் நாண்ட்ரே பர்கர் டெஸ்ட்டில் அறிமுகமாகினர். 
இந்திய இன்னிங்ûஸ தொடங்கியோரில், கேப்டன் ரோஹித் சர்மா 1 பவுண்டரியுடன் 5 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டார். ரபாடா வீசிய 5-ஆவது ஓவரில் அவரடித்த பந்தை பர்கர் கேட்ச் பிடித்தார். தொடர்ந்து ஷுப்மன் கில் களம் புக, மறுபுறம் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4 பவுண்டரிகள் உள்பட 17 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார். 
10-ஆவது ஓவரில் பர்கர் பந்துவீச்சை எதிர்கொண்ட அவர், விக்கெட் கீப்பர் கைல் வெரினிடம் கேட்ச் கொடுத்தார். அடுத்து வந்த விராட் கோலி, சற்று நிதானித்து ரன்கள் சேர்க்கத் தொடங்கினார். 
ஆனால், கில் 2 ரன்களில் இருந்தபோது பர்கர் வீசிய 12-ஆவது ஓவரில் ஒரு பந்தை விளாச முயல, அது வெரின் கைகளில் தஞ்சமானது. 5-ஆவது வீரராக ஷ்ரேயஸ் ஐயர் ஆட வந்தார். மதிய உணவு இடைவேளையின்போது இந்தியா 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 91 ரன்கள் சேர்த்திருந்தது. 
பின்னர் தொடர்ந்த ஆட்டத்தில் ஐயர் 3 பவுண்டரிகள், 1 சிக்ஸர் உள்பட 31 ரன்கள் சேர்த்த நிலையில் ரபாடா வீசிய 27-ஆவது ஓவரில் ஸ்டம்ப்பை பறிகொடுத்தார். 
இதனால், கோலி - ஐயர் 4-ஆவது விக்கெட் பார்ட்னர்ஷிப் 68 ரன்களுடன் முடிவுக்கு வந்தது. அப்போது களம் புகுந்த கே.எல்.ராகுல் நிதானமாக விளையாடத் தொடங்கினார். மறுபுறம் அத்தகைய ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த கோலி 5 பவுண்டரிகள் உள்பட 38 ரன்களுக்கு வீழ்ந்தார். ரபாடா வீசிய 31-ஆவது ஓவரில் அவர் வெரினிடம் கேட்ச் கொடுத்தார். 
பின்னர் ரவிச்சந்திரன் அஸ்வின் 2 பவுண்டரிகள் விளாசிய நிலையில், ரபாடா வீசிய 35-ஆவது ஓவரில் வியான் முல்டரிடம் கேட்ச் கொடுத்து முடித்துக் கொண்டார். 8-ஆவது வீரராக வந்த ஷர்துல் தாக்குர் சற்று தாக்குப் பிடித்து, ராகுலுக்கு துணை நின்றார். இந்த ஜோடி 7-ஆவது விக்கெட்டுக்கு 43 ரன்கள் சேர்த்திருக்க, தாக்குர் 3 பவுண்டரிகளுடன் 24 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 
ரபாடா வீசிய 47-ஆவது ஓவரில் அவர் டீன் எல்கரிடம் கேட்ச் கொடுத்தார். அடுத்து வந்த ஜஸ்பிரீத் பும்ரா 1 ரன்னுக்கு, மார்கோ யான்சென் வீசிய 55-ஆவது ஓவரில் பெளல்டானார். பின்னர், 10-ஆவது வீரராக முகமது ஷமி வந்தார். இந்நிலையில், வெளிச்சமின்மை காரணமாக தடைப்பட்ட ஆட்டம், பின்னர் மழை காரணமாக முன்னதாகவே முடித்துக் கொள்ளப்பட்டது. 
அரைசதம் கடந்த ராகுல் 70, ஷமி 0 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளனர். தென்னாப்பிரிக்க தரப்பில் ரபாடா 5, பர்கர் 2, யான்சென் 1 விக்கெட் எடுத்துள்ளனர். 
பவுமா காயம்: முதல் நாள் ஆட்டத்தில் ஃபீல்டிங்கின்போது தென்னாப்பிரிக்க கேப்டன் டெம்பா பவுமா இடதுகால் தொடைப் பகுதியில் காயம் கண்டு வெளியேறினார். அவருக்கு பதிலாக வியான் முல்டர் இணைந்துள்ளார். 


சுருக்கமான ஸ்கோர்

இந்தியா 208/8

கே.எல்.ராகுல்    70*
விராட் கோலி    38 
ஷ்ரேயஸ் ஐயர்    31
பந்துவீச்சு 
ககிசோ ரபாடா    5/44
நாண்ட்ரே பர்கர்    2/50 
மார்கோ யான்சென்    1/52

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com