பந்துவீச்சில் அசத்திய பாட் கம்மின்ஸ்; பாகிஸ்தானை வீழ்த்தி டெஸ்ட் தொடரைக் கைப்பற்றிய ஆஸ்திரேலியா!

ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸின் அபார பந்துவீச்சினால் பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி 79 ரன்கள்  வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பந்துவீச்சில் அசத்திய பாட் கம்மின்ஸ்; பாகிஸ்தானை வீழ்த்தி டெஸ்ட் தொடரைக் கைப்பற்றிய ஆஸ்திரேலியா!

ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸின் அபார பந்துவீச்சினால் பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி 79 ரன்கள்  வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி மெல்பர்னில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் மூன்றாம் நாளான நேற்று (டிசம்பர் 28) ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் எடுத்திருந்தது. பாகிஸ்தானைக் காட்டிலும் 241 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. 

இந்த நிலையில், இன்று நான்காம் நாள் ஆட்டம் தொடங்கியது. ஆஸ்திரேலிய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 262 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனையடுத்து, பாகிஸ்தான் அணிக்கு 317 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 

இரண்டாவது இன்னிங்ஸில் பாகிஸ்தான் 237 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஷான் மசூத் 60 ரன்களும், அஹா சல்மான் 50 ரன்களும் எடுத்தனர். ஆஸ்திரேலியா தரப்பில் சிறப்பாக பந்துவீசிய கேப்டன் பாட் கம்மின்ஸ் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். மிட்செல் ஸ்டார்க் 4 விக்கெட்டுகளையும், ஜோஸ் ஹேசில்வுட் ஒரு விக்கெட்டினையும்  கைப்பற்றினர்.

இதன்மூலம், இரண்டாவது டெஸ்டில் 79  ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை ஆஸ்திரேலியா வீழ்த்தியது. இந்த டெஸ்டில் 10 விக்கெட்டுகளைக் கைப்பற்றி ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு வித்திட்ட அந்த அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

இந்த வெற்றியின் மூலம் 3  போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com