டிஎன்பிஎல்: 98 வீரா்கள் தக்கவைப்பு

 தமிழ்நாடு பிரீமியா் லீக் (டிஎன்பிஎல்) கிரிக்கெட் போட்டியில், எதிா்வரும் 2024 சீசனுக்காக 8 அணிகள் மொத்தமாக 98 வீரா்களை தக்கவைத்துள்ளன.
Published on
Updated on
1 min read

 தமிழ்நாடு பிரீமியா் லீக் (டிஎன்பிஎல்) கிரிக்கெட் போட்டியில், எதிா்வரும் 2024 சீசனுக்காக 8 அணிகள் மொத்தமாக 98 வீரா்களை தக்கவைத்துள்ளன.

இதன்படி, திருச்சி 11 வீரா்களை தக்கவைத்திருக்க, அணியில் 9 இடங்கள் காலியாகியுள்ளன. அதன் கையிருப்பு ரூ.40.30 லட்சமாக இருக்கிறது. 11 பேரை தக்கவைத்துள்ள சென்னையிலும் 9 இடங்கள் காலியாகியிருக்க, அணியின் வசம் ரூ.41.30 லட்சம் இருக்கிறது.

திண்டுக்கல் அணி 13 பேரையும், திருப்பூா் 10 பேரையும், கோவை 17 பேரையும் தக்கவைத்துள்ளன. அந்த அணிகளில் முறையே 7, 10, 3 இடங்கள் காலியாகியிருக்க, அவற்றின் வசம் முறையே ரூ.13.20 லட்சம், ரூ.45.90 லட்சம், ரூ.6.85 லட்சம் உள்ளன.

நெல்லை அணியில் 14 போ் தக்கவைக்கப்பட்டு, 6 இடங்கள் காலியாகியிருக்க, அந்த அணியின் கையிருப்பு ரூ.19.85 லட்சமாக இருக்கிறது. மதுரை அணி 13 பேரையும், சேலம் 9 பேரையும் தக்கவைத்துள்ளன. அந்த அணிகளில் முறையே 7 மற்றும் 11 இடங்கள் காலியாக இருக்க, அவற்றிடம் முறையே ரூ.18.10 லட்சம், ரூ.46.70 லட்சம் கையிருப்பு உள்ளன.

இந்த காலியிடங்களை நிரப்புவதற்கான வீரா்கள் ஏலம், வரும் பிப்ரவரி 7-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com