இந்திய அணியின் ஆல்ரவுண்டர்களில் ஒருவரான ஷர்துல் தாக்குர் வலைப்பயிற்சியில் ஈடுபட்டபோது அவருக்கு தோள்பட்டையில் அடிபட்டது.
இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான் டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது டெஸ்ட் போட்டி வருகிற ஜனவரி 3 ஆம் தேதி கேப்டவுனில் தொடங்குகிறது.
இதையும் படிக்க: இலங்கை டி20 அணிக்கு ஹசரங்கா கேப்டன்: அதிகாரபூர்வ அறிவிப்பு!
இந்த நிலையில், இந்திய அணியின் ஆல்ரவுண்டர்களில் ஒருவரான ஷர்துல் தாக்குர் வலைப்பயிற்சியில் ஈடுபட்டபோது அவருக்கு தோளில் அடிபட்டது.
இந்திய அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளர் திலீப்புடன் வலைப்பயிற்சியில் பேட்டிங் செய்தபோது ஷர்துல் தாக்குருக்கு தோள்பட்டையில் அடிபட்டது. அதன்பின், ஷர்துல் தாக்குர் வலைப்பயிற்சியில் பந்துவீசவில்லை. இதனால், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது போட்டியில் அவர் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இதையும் படிக்க: பாலியல் வன்கொடுமை: பிரபல நேபாள வீரருக்கு தண்டனை உறுதி!
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெறும் 19 ஓவர்களில் 100-க்கும் அதிகமான ரன்களை ஷர்துல் தாக்குர் வழங்கியது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பயணம் தாமதமாகும்! திருச்சியில் புறவழிச் சாலை காவிரிப் பாலம் மூடப்பட்டது!
சென்னை, புறநகரில் பலத்த காற்றுடன் கனமழை!

திருமணத்துக்கு முன் குஷ்பு மகள் அவந்திகா பகிர்ந்த படங்கள்!
கணக்கில் வராத ரூ.40 லட்சம் பறிமுதல்! எ.வ. வேலுக்கு தொடர்புடைய 20 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!
விடியோக்கள்

மெஸ்ஸியைத் துரத்தும் எம்பாபே! | FIFA | FIFA World Cup | Messi |

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani



