நன்றாக விளையாடியும் ஆதங்கப்படும் ராகுல் திரிபாதி!

டி20 தொடரை வென்றதில் தன்னுடைய பங்களிப்பு பற்றி மனம் திறந்துள்ளார் அதிரடி பேட்டர் ராகுல் திரிபாதி.
நன்றாக விளையாடியும் ஆதங்கப்படும் ராகுல் திரிபாதி!

டி20 தொடரை வென்றதில் தன்னுடைய பங்களிப்பு பற்றி மனம் திறந்துள்ளார் அதிரடி பேட்டர் ராகுல் திரிபாதி.

நியூசிலாந்துக்கு எதிரான கடைசி மற்றும் 3-வது டி20 ஆட்டத்தில் இளம் வீரா் ஷுப்மன் கில்லின் சூறாவளி ஆட்டத்தால் 168 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரையும் 2-1 எனக் கைப்பற்றியது இந்தியா. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 234/4 ரன்களைக் குவித்தது. பின்னா் ஆடிய நியூஸி அணி. வெறும் 66 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி படுதோல்வி அடைந்தது. பாண்டியா 4 விக்கெட்டுகளை எடுத்தார். இந்திய அணியின் இன்னிங்ஸில் 63 பந்துகளில் 7 சிக்ஸர்கள், 12 பவுண்டரிகளுடன் 126 ரன்கள் எடுத்து சாதனை படைத்தார் ஷுப்மன் கில். ராகுல் திரிபாதி 22 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 44 ரன்களும் சூர்யகுமார் யாதவ் 24, பாண்டியா 30 ரன்களும் எடுத்தார்கள். 

இந்நிலையில் தனது ஆட்டம் பற்றி ராகுல் திரிபாதி கூறியதாவது:

நான் இன்னும் கொஞ்சம் ரன்கள் எடுத்திருந்தால் மகிழ்ச்சி அடைந்திருப்பேன். பயிற்சியாளர் ராகுல் டிராவிட் உள்பட அனைவரும் என்னுடைய வழக்கமான ஆட்டத்தையே தொடரச் சொல்கிறார்கள். அதனால் முதல் 6 ஓவர்களில் அணிக்கு நிறைய ரன்கள் கிடைக்கும். ஆமதாபாத் மைதானத்தில் இத்தனை பெரிய கூட்டத்தின் நடுவே விளையாடுவது மகத்தானதாக இருக்கிறது. தொடரை வென்றதும் கூடுதல் மகிழ்ச்சியைத் தருகிறது என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com